Dailyhunt
Gold Price : தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி குறைவு.. மீண்டும் ரூ.13,000-க்கு வந்த தங்கம்!

Gold Price : தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி குறைவு.. மீண்டும் ரூ.13,000-க்கு வந்த தங்கம்!

TV9 Tamil 1 week ago
சென்னை, மே 05 : மேற்கு ஆசிய போர் (West Asia War) காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.
அந்த வகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.180 குறைந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இடையே பிப்ரவரி 28, 2026 முதலே தொடர் சிக்கல்கள் நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோ, டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக தங்கம் கடந்த ஒரு மாதமாக மந்தமான நிலையில் உள்ளது. உதாரணமாக சில நாட்கள் உயர்வை சந்திக்கும் தங்கம், சில நாட்கள் சரிவை சந்திக்கிறது. இவ்வாறு தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.
SIP Vs வங்கி கடன்.. சாட்ஜிபிடியிடம் உதவி கேட்ட நபர்.. அசத்தலான அறிவுரை!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.180 குறைந்து ஒரு கிராம் ரூ.13,820-க்கும், சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.265-க்கு, ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil