தென்னிந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar).
இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்நது திரைப்படங்களும் வெளியாகிவருகிறது. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என இரு பணிகளையும் சிறப்பாக செய்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக ஹேப்பி ராஜ் (Happy Raj) என்ற படமானது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக புது புது திரைப்படங்களிலும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஒப்பந்தமாகிவருகிறார். இவரின் நடிப்பில் இம்மார்ட்டல், மெண்டல் மனதில் என அடுத்தடுத்த புதிய திரைப்படங்கள் தயாராகிவருகிறது. மேலும் இவர் இசையமைப்பாளராகவும், சூர்யா (Suriya), தனுஷ் (Dhanush), துல்கர் சல்மான் போன்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்கும் பணிகளில் இருக்கிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றின் விளம்பரத்திற்கு சென்றிருந்தார். அந்த விளம்பரத்திற்கு இராகு செய்தியாளர்களை சந்தித்த ஜி.வி.பிரகாஷ், கோடி ரூபா கொடுத்தால் சில விளம்பரங்களை செய்யமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
முதல் பாகத்தை விட ஜெயிலர் 2 படம் மாபெரும் வெற்றியைப் பெறும் - நடிகர் யோகி பாபு
விளம்பரங்கள் குறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசிய விஷயம் :
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில், "நான் எல்லா கமர்ஷியல் விளம்பரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன். போதைப்பொருள் சம்மந்தமான விளம்பரங்கள் மற்றும் கேம்ப்ளிங் சம்மந்தமான விளம்பரங்களை நான் ஒருபோதும் ப்ரொமோட் செய்ததில்லை. மேலும் பெரிய பெரிய கூல்டிரிங்ஸ் நிறுவனங்கள், தங்களின் விளம்பரங்களுக்காக என்னை அணுகியிருந்தனர். அந்த படத்திற்காக முதலில் சாய் பல்லவியைதான் அணுகினேன் - இயக்குநர் ரத்னகுமார்! கோடி கணக்கில் காசு கொடுக்கிறேன் என சொன்னாங்க, இருந்தாலும் நான் அதுபோன்ற விஷயங்களை செய்ததில்லை. நான் தற்போது ஒரு பொழுதுபோக்கு பூங்காவின் விளம்பரம் என்பதற்காக மட்டுமே செய்தேன். இது குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் கொண்டாடும் ஒரு இடம். மேலும் கர திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, படத்தை நாங்கள் முழுவதுமாக பார்த்துவிட்டோம். சிறப்பாக வந்திருக்கிறது" என அதில் அவர் பேசியிருந்தார்.விளம்பரங்கள் குறித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசிய வீடியோ பதிவு:
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையமைப்பில், கர படமானது வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகவுள்ளது. இதில் தனுஷ் மற்றும் மமிதா பைஜூ இருவருமே இணைந்து நடித்துள்ளனர். இதன் ட்ரெய்லர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், திரையரங்குகளில் வெற்றியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

