Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
H Vinoth: ஜன நாயகன் எப்போ சார் வரும்? - இயக்குநர் எச்.வினோத் கொடுத்த பதில்!

H Vinoth: ஜன நாயகன் எப்போ சார் வரும்? - இயக்குநர் எச்.வினோத் கொடுத்த பதில்!

TV9 Tamil 1 month ago
தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்துவந்தவர் தளபதி விஜய் (Thalapathy Vijay).
இவர் தற்போது முழுமையாக அரசியலில் இறங்கிவிட்ட நிலையில், சினிமாவிலிருந்து முழுமையாக விலகிவிட்டார். இவரின் நடிப்பில் கோலிவுட் சினிமாவில் இறுதியாக உருவாகியுள்ள திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இப்படமானது தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக தயாராகியிருந்த நிலையில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்திருந்தது. இதில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே (Pooja Hegde), நரேன், பிரியாமணி, மமிதா பைஜூ (Mamitha Baiju) மற்றும் பிரகாஷ் ராஜ் உட்பட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலே வெளியாகவேண்டியிருந்த நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. மேலும் இப்படம் முழுவதும் இணையத்தில் கசிந்து, அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இவ்வாறு இணையத்தில் கசிந்திருந்தும் படத்திற்கு இன்னும் சென்சார் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பொது இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் பேசிய எச்.வினோத் ஜன நாயகன் பட ரிலீஸ் பற்றி தெரிவித்துள்ளார்.   ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு - அப்டேட் இதோ

ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வீடியோவில் பேசியிருந்த எச்.வினோத்:

சமீபத்தில் பொது இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், இயக்குநர் எச்.வினோத்திடம் நபர் ஒருவர், "சார், ஜன நாயகன் எப்போது சார் ரீலீஸாகும்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த எச். வினோத், "வரும்போது வரும்" என சிரித்துக்கொண்டே பதிலளித்திருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.   40 வருடங்களை நிறைவு செய்தது கமல் ஹாசனின் விக்ரம் படம் - கொண்டாடும் படக்குழு

ஜன நாயகன் பட ரிலீஸ் குறித்து எச். வினோத் பேசியது தொடர்பாக வைரலாகும் வீடியோ பதிவு:

ஜன நாயகன் பட ரிலீஸ் எப்போது:

ஜன நாயகன் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படமானது அரசியல், ஆக்ஷன் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற கருத்துக்களை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்க பாடல்களும் வைப்பாக தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படமானது 2026 ஜூன் 19ம் தேதியில், முதல்வரு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil