நடிகை நயன்தாராவின் (Nayanthara) நடிப்பில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல், திரையரங்குகளில் எந்த படங்களும் வெளியாகவில்லை.
ஹாய் பட ஷூட்டிங்கில் நடந்த நகைச்சுவையான தருணம் குறித்து விஷ்ணு எடவன் பேச்சு:
அதில் இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில், "நயன்தாரா மேடம் தயாரிப்பில், கவின் நடிப்பில் ஊர்க்குருவி என்ற படம் ஒன்று திட்டமிடப்பட்டது. அந்த நாளிலிருந்தே நயன்தாரா மேடமிற்கு கவினை நன்கு தெரியும். அந்த வகையில் ஹாய் பட ஷூட்டிங்கின் முதல் நாளிலேயே, கவின் நயன்தாராவைக் கட்டிப்பிடிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது. அப்போது கவின் அதைப் பற்றிச் சற்றுத் தயங்கினார். லவ் மட்டும் இருந்தா பத்தாது வாஸ்.. அதிரடி காதல் கதையில்.. வெளியானது 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் ட்ரெய்லர்! உடனே, நயன்தாரா மேடம், "நீ இதற்கு முன் யாரையும் கட்டிப்பிடித்ததில்லையா?" என்று கேட்டு அவரைக் கிண்டல் செய்தார். படப்பிடிப்புத் தளத்தில், அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் வரும்போதெல்லாம், வேடிக்கையும் சிரிப்பும் நிறைந்திருக்கும்" என அதில் அவர் தெரிவித்திருந்தார்.ஹாய் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
இந்த ஹாய் படமானது முழுக்க பீல் குட் திரைப்படமாக உருவாகிவருகிறதாம். இந்த படம் நயன்தாரா மற்றும் கவினுக்கு தமிழ் சினிமாவில் ஒரு கம்பேக் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இப்படம் வரும் 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. ஆனாலும் இன்னும் ரிலீஸ் தேதி உறுதிசெய்யப்படவில்லை.

