தமிழ் சினிமா மட்டும் இன்றி கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் அதிக அளவில் இளம் தலைமுறையினருக்கு புதிதாக வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
அந்த வகையில் சினிமாவில் அனைத்து துறைகளிலும் இளம் தலைமுறையினரில் அறிமுகம் அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக நடிப்புத் துறையில் நடிகர்களாக பல யூடியூபர்கள் அறிமுகம் ஆகி வருவது தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் யூடியூப் மூலம் மக்களிடையே பிரபலம் ஆன பாரத் தற்போது நாய்கனாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. யூடியூபில் நடித்து வீடியோ வெளியிடும் போதே தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா மக்களிடையே கவனத்தைப் பெற்று வந்த பாரத் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் ஹரி ஹரசுதன் அழகிரி எழுதி இயக்கி உள்ளார். மேலும் ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் பாரத்திற்கு ஜோடியாக நடிகை சான்வி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர் பால சரவணனும் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள நிலையில் படத்தின் டைட்டில் புரோமோவை படக்குழு வெளியிட்டது. அதன்படி இந்தப் படத்திற்கு காவிய காதல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வைரலாகும் காவிய காதல் பட டைட்டில் புரோமோ வீடியோ:
அதன்படி இந்த டைட்டில் புரோமோ வீடியோவைப் பார்க்கும் போது காதலில் மாறுபட்ட கருத்து உடைய நாயகன் மற்றும் நாயகி இருவரும் காதலிக்கும் போது என்ன நடக்கும் என்பதே படத்தின் கதை. காதலில் ப்ராக்டிகலாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் காதலியும், காதல் என்றாலே க்ரிஞ்ச் வேலைகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளவர்தான் நாயகன். இந்த டைட்டில் வீடியோவைப் பார்க்கும் போதே கலகலப்பாக படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு படம் என்ன ஆனது? தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸ்ய விசயம்காவியக் காதல் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

