Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இணையத்தில் வைரலாகும் கான் சிட்டி படத்திலிருந்து வெளியான ஃப்ராடு பயலே பாடல்

இணையத்தில் வைரலாகும் கான் சிட்டி படத்திலிருந்து வெளியான ஃப்ராடு பயலே பாடல்

TV9 Tamil 3 weeks ago
மிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
மேலும் தமிழ் சினிமாவில் வில்லனாக மக்களிடையே பிரபலமான இவர் நாயகனாகவும் நடித்து வருகிறார். பொதுவாக சினிமாவை பொறுத்தவரை வில்லனாக இருந்து நாயகனாக மாறும் நடிகரோ அல்லது காமெடியனாக இருந்து நாயகனாக மாறும் நடிகரோ மீண்டும் வில்லன் அல்லது காமெடியன் கதாப்பாத்திரங்களில் நடிப்பதை தவிர்ப்பார்கள். தொடர்ந்து நாயகன் அந்தஸ்து போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதனை கடைபிடிப்பார்கள். ஆனால் நடிகர் அர்ஜுன் தாஸ் அதிலிருந்து சற்று மாறுபட்டுள்ளார். அதன்படி அவர் வில்லனாக அறிமுகம் ஆகி நாயகனாக நடித்து வந்தாலும் தொடர்ந்து வில்லன் கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். அதன்படி நாயகன்  மற்றும் வில்லன் என மாறி மாறி நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது நாயகனாக நடித்து வரும் படம் கான் சிட்டி. இந்தப் படம் ஜூன் மாதம் 26-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் கான் சிட்டி படத்தின் மூன்றாவது சிங்கிள்:

இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக நடிகை அன்னா பென் நடித்துள்ளார். இது அன்னா பென் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து படத்தில் முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து தற்போது மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு - அப்டேட் இதோ

கான் சிட்டி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil