இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு (IND vs ENG 3rd T20) இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது.
டாஸ் எப்போது போடப்படும்?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி நாளை அதாவது 2026 ஜூலை 7ம் தேதி நாட்டிங்ஹாமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டிரென்ட் பிரிட்ஜ் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை நீங்கள் நேரலையில் பார்க்க விரும்புவோர், தூக்கத்தை சற்றே தியாகம் செய்ய வேண்டியிருக்கும். இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்குத் தொடங்கிய நிலையில், 3வது போட்டியின் நேரம் முற்றிலும் மாறுபட்ட நேரமாக உள்ளது. டிரென்ட் பிரிட்ஜில் நடைபெறும் இந்தப் போட்டிக்கான டாஸ் இரவு 9:30 மணிக்கு நடைபெறும். அதே சமயம் போட்டியின் முதல் பந்து இரவு 10:00 மணிக்கு வீசப்படும்.நேருக்கு நேர் சாதனைகள்:
இரு அணிகளின் ஒட்டுமொத்த சாதனைகளைப் பற்றிப் பேசினால், டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்குச் சற்று முன்னிலை இருப்பதாகத் தெரிகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 18 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரத்தில், ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது. இங்கிலாந்து மண்ணை பொறுத்தவரை, இதுவரை இவ்விரு அணிகளும் இங்கிலாந்தில் 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம், இந்தியா 4 வெற்றிகளையும் ஒரு சமனையும் மட்டுமே பெற்றுள்ளது. வரலாற்றிலேயே முதல் முறை.. மோசமான சாதனையை சுமக்கும் ஷ்ரேயாஸ் ஐயர்!டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தின் சாதனை:
நாட்டிங்ஹாமின் டிரென்ட் பிரிட்ஜ் ஸ்டேடியத்தில் இந்தியாவின் சாதனை கலவையாகவே இருந்துள்ளது. இங்கு விளையாடிய 4 போட்டிகளில், இந்தியா இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் கண்டுள்ளது. சுவாரஸ்யமாக, 2022-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்தியா தனது ஒரே போட்டியில் விளையாடியது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 215 ரன்களை துரத்தும்போது, இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இருப்பினும், இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் வெறும் 55 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தும், இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
