Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி எப்போது? முழு விவரம் இதோ!

IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி எப்போது? முழு விவரம் இதோ!

TV9 Tamil 3 months ago
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து(IND vs ENG) அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தொடங்கியுள்ளது.
தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டதால், ரசிகர்கள் 2வது போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப் போட்டி, மான்செஸ்டரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் ஸ்டேடியத்தில் வருகின்ற 2026 ஜூலை 4ம் தேதி நடைபெறுகிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான போட்டி எப்போது, எங்கு, எத்தனை மணிக்கு நடைபெறுகிறது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம். இங்கிலாந்து ஒருநாள் தொடருக்குத் தயாரான விராட் கோலி.. வைரலாகும் வீடியோ க்ளிப்!

இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு தொடங்குகிறது..?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி 2026 ஜூலை 4ம் தேதி எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறும். கடந்த இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் போட்டி இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்கும் நிலையில், 2வது போட்டியானது இங்கிலாந்து நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்குத் தொடங்கும். , மேலும் இந்தியாவில்

எந்த சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது?

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 தொடரின் அனைத்துப் போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் நேரலையாகக் காணலாம்.
  • நேரடி ஒளிபரப்பு (தொலைக்காட்சி): சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்
  • நேரலை ஒளிபரப்பு (டிஜிட்டல்): ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்தில் பார்க்கலாம்.
5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ரத்து செய்யப்பட்டதால், தொடர் தற்போது 0-0 என சமநிலையில் உள்ளது. இதன் பொருள், தொடர் தோல்வியைத் தவிர்க்க இன்னும் 2 வெற்றிகள் மட்டுமே தேவையாக உள்ளது. எனவே, இரு அணிகளும் இரண்டாவது போட்டியில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்ய முனைந்துள்ளன.

ஓல்ட் டிராஃபோர்ட் ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்:

ஓல்ட் டிராஃபோர்ட் ஸ்டேடியம் ஒரு சமச்சீரான ஆடுகளத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஆரம்பத்தில் இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். அதே சமயம், அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்போது சுழற்பந்து வீச்சாளர்கள் போட்டியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதால், இந்தப் போட்டியிலாவது மழை பெய்ய கூடாது என ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். 2026 ஜூலை 4ம் தேதி வானிலை முன்னறிவிப்பின்படி, போட்டியைப் பெரிய அளவில் மழை பாதிக்காது. எனவே, ஓல்ட் டிராஃபோர்டில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஒரு கடுமையான போட்டியை எதிர்பார்க்கலாம். 13 நாட்களில் 2 டெஸ்ட் போட்டிகள்.. இலங்கை செல்லும் இந்திய அணி.. டெஸ்ட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு!

இரு அணிகளின் விவரம்:

இங்கிலாந்து டி20 அணி:

ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), பில் சால்ட், ஜோர்டான் காக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் பேன்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரண், வில் ஜாக்ஸ், ஜேக்கப் பெத்தேல், ஜேம்ஸ் கோல்ஸ், அடில் ரஷித், ரேஹான் அகமது, லியாம் டாசன், சாகிப் மஹ்மூத், ஜோஷ் டோங், லூக் வுட், சோனி பேக்கர்.

இந்திய டி20 அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷதீப் சிங், சிவம் துபே, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ்
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil