Dailyhunt
India vs Namibia: சுழலில் சுருட்டிய வருண் சக்கரவர்த்தி.. டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 2வது வெற்றி!

India vs Namibia: சுழலில் சுருட்டிய வருண் சக்கரவர்த்தி.. டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 2வது வெற்றி!

TV9 Tamil 2 months ago

2026 டி20 உலகக் கோப்பையில்(2026 T20 World Cup)இந்தியா - நமீபியா(India vs Nambia) இடையிலான போட்டி இன்று அதாவது 2026 பிப்ரவரி 12ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் விளையாடியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ​​சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். சிறப்பான தொடக்க கொடுத்த சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார், இஷான் கிஷான் 24 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.

இருப்பினும், இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பியது. ரிங்கு சிங் ஒரு ரன்களிலும், முதல் பந்திலேயே அக்சர் படேலும் ஆட்டமிழந்தனர். சிவம் துபே 23 ரன்கள் எடுக்க, மறுமுனையில் ஹர்திக் பாண்ட்யா 52 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. நமீபியா அணிக்காக கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் 4விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டி20 உலகக் கோப்பை அறிமுகத்தில் சொதப்பல்.. சஞ்சு கிரிக்கெட் வாழ்க்கை என்னாகும்..?

இந்திய அணி பந்துவீச்சாளர்கள் அபாரம்:


210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தது. நமீபியாவின் தொடக்க ஜோடியான லோரன் ஸ்டீன்காம்ப் மற்றும் ஜான் ஃப்ரைலிங்க் 33 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இருப்பினும், ஜான் ஃப்ரைலிங்க் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்த, மறுமுனையில் வருண் சக்ரவர்த்தி 12 பந்துகளில் 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டார். அடுத்தடுத்து நமீபியா பேட்ஸ்மேன்கள் விழ, 116 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தோல்வி.. சூப்பர் 8க்கு செல்லுமா இங்கிலாந்து..? புள்ளிகள் அட்டவணை இதோ!

இது டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும், ரன்கள் வித்தியாசத்தில். முன்னதாக, உலகக் கோப்பையில் டீம் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி 90 ரன்கள் வித்தியாசத்தில் இருந்தது. 2012 உலகக் கோப்பையில் இந்தியா இங்கிலாந்தை 90 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. டி20 உலகக் கோப்பையில் ரன்கள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றிகளின் பட்டியலில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.

இதன் மூலம், தொடர்ச்சியாக அதிக டி20 உலகக் கோப்பை வெற்றிகளைப் பெற்ற அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்தது. இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் தொடர்ச்சியான 10வது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி சூப்பர் 8 கட்டத்தை நெருங்கி, குரூப் ஏ-யில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் அடுத்த போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக மோதவுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil