இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் பல முக்கிய மாற்றங்கள் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மான்செஸ்டரில் நடைபெறவுள்ள 2வது போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் சேர்க்கப்படுவது ஏறக்குறைய உறுதி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியில் 3 முக்கிய மாற்றங்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்ப்பது மட்டுமல்லாமல், அவரை துவக்க ஆட்டக்காரராக களமிறக்குவது தொடர்பாக பயிற்சியாளரும் கேப்டனும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிரடியாக ஆடிவரும் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து வைபவ் இன்னிங்ஸைத் தொடங்குவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றம் இந்தியாவின் பேட்டிங் வரிசையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.தற்போதைய துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனை 3வது இடத்திற்கு மாற்றவும், தற்போது மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யும் இஷான் கிஷனை மிடில் ஆர்டருக்கு மாற்றவும் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிர்ச்சி தரும் விஷயமாக திலக் வர்மாவுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பேட்டிங் வரிசை மட்டுமல்லாமல், பந்துவீச்சாளர்கள் வரிசையிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. முந்தைய போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான வருண் சக்ரவர்த்தி அல்லது ரவி பிஷ்னோய் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மான்செஸ்டர் மைதானத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, ரன்களைக் கட்டுப்படுத்துவதோடு பேட்டிங்கிலும் கைகொடுக்கக்கூடிய ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை களமிறக்க இந்திய அணி தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இந்த மூன்று முக்கிய மாற்றங்கள் மூலம் இங்கிலாந்து அணிக்குக் கடும் சவாலை அளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

