Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இனி பத்திரப்பதிவு செய்ய அலைய வேண்டாம்.. வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமே செய்யலாம்.. விரைவில் அமலுக்கு வருது!

இனி பத்திரப்பதிவு செய்ய அலைய வேண்டாம்.. வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமே செய்யலாம்.. விரைவில் அமலுக்கு வருது!

TV9 Tamil 1 week ago
மிழகத்தில் பத்திரப்பதிவு மிகவும் சிக்கலான விவகாரமாக உள்ளது. வீடு, நிலம், சொத்து என எதை வாங்கினாலும் அதனை பத்திரப்பதிவு செய்ய பத்திரப்பவு அலுவலகங்களுக்கு நடையாக நடக்க வேண்டும்.
ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பத்திரப்பதிவு வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைக்கப்படும். அப்படியே அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் பத்திரப்பதிவு செய்ய தேவையான அனைத்து நபர்களும் தங்களது ஒரு நாள் முழுவதையும் செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் எந்தவித சிக்கல்களும் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய முடியும். இவ்வாறு பத்திரப்பதிவு செய்ய பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொண்டு வந்த நிலையில், எந்த வித சிக்கல்களும் இல்லாமல் வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு செய்யும் அம்சத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திமுக அரசின் ஸ்டார் 3.0 திட்டத்தை அமலுக்கு கொண்டுவரும் அரசு

திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் Faceless மற்றும் Paperless பத்திரப்பதிவு சேவையை படிப்படியாக அனைத்து வகை ஆவணங்களுக்கும் விரிவுப்படுத்தும் வகையில் ஸ்டார் 3.0 திட்டம் (STAR 3.0) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை தான் தற்போது தமிழக வெற்றிக் கழக அரசு அமலுக்கு கொண்டுவர உள்ளது. அதாவது, Anywhere Registration என்ற திட்டத்தின் மூலம் பத்திரப்பதிவு சேவையை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன என்ன?

அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

ஸ்டர 3.0 திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், அதற்கான ஒப்புதலை வழங்கி வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் படி, ஆகஸ்ட் 17, 2026 முதல் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீட்டு மனை சார்ந்த பத்திரங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலமே முழுமையாக பதிவு செய்யும் முறை அமலுக்கு வர உள்ளது. Gold : வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்துக்கு வட்டி.. அரசு அறிமுகம் செய்ய உள்ள அசத்தல் திட்டம்.. என்ன தெரியுமா? தற்போது நடைமுறையில் உள்ள ஆவணங்களை அதே நாளில் பதிவு செய்து திருப்பி வழங்கும் சேவை, இந்த ஆன்லைன் முறைக்கும் தொடரும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil