Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இனி நோ பவர் கட்.. மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் தடைக்கு நிரந்தர தீர்வு.. மின்துறையில் RTEP திட்டம்!

இனி நோ பவர் கட்.. மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் தடைக்கு நிரந்தர தீர்வு.. மின்துறையில் RTEP திட்டம்!

TV9 Tamil 5 days ago
மிழகத்தில் தொடர்ந்து ஒரே இடங்களில் ஏற்படும் மின் தடைகளை நிரந்தரமாக சரி செய்வதற்கு ரிப்பீட் ட்ரிப்பிங் எலிமினேஷன் புரோகிராம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறுயிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது 3.5 கோடிக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர்களுக்கு தடையற்ற மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சில துணை மின் நிலையங்கள் மற்றும் மின் வழித்தடங்கள், மின் வலையமைப்புகளில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. அதன்படி, மீண்டும் மீண்டும் மின்தடை ஏற்படும் இடங்களை கண்டறிந்து அதன் மூல காரணத்தை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிக அளவு மின் தடை ஏற்பட்ட பகுதிகள்

கடந்த 6 மாதங்களில் அதிக அளவில் மின்தடை ஏற்பட்ட துணை மின் நிலையங்கள் மற்றும் மின் வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கான தனி பதிவேடுகளை பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மின்தடை ஏற்படும் போது ரூட் காஸ் அனாலிசிஸ் செய்யப்பட்டு தற்காலிக சீரமைப்பை மட்டுமின்றி நிரந்தர பொறியியல் தீர்வுகளை செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மின்தடை சம்பவங்கள் தொடர்பாக மின் உற்பத்தி, மின் பரிமாற்றம்.  தவெக கூட்டணியில் குழப்பம்?.. 'வார்த்தைகளில் விளையாட வேண்டாம்!'.. திருமாவளவனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!!

மின்தடை தொடர்பாக ஒருங்கிணைந்த ஆய்வு

மின் பாதுகாப்பு, மின் பகிர்மானம் மற்றும் திட்டமிடல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப பிரிவுகளும் மின்தடை குறித்து ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் உபகரண உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆலோசனையையும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு, மாநில அளவில் நிபுணர்கள் குழு மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டு குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டமைப்பு பணிகளை விரைந்து

இது மட்டுமின்றி, 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்துள்ள புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் மின் கட்டமைப்பு பணிகளை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வாரம் தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலமாக மின் வலையமைப்பின் நம்பகத்தன்மை அதிகரித்து, தொடர்ச்சியாக மின்தடை ஏற்படுவது குறையும் என்று தெரிவித்தார்.  'மருத்துவக் கனவில் இடி!'.. தமிழகத்தில் 650 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகிறது.. கட்டணமும் பல மடங்கு உயரும் அபாயம்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil