ஈரான் (Iran) மீது அமெரிக்கா (America), இஸ்ரேல் (Israel) ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
ஈரான் மீது கூட்டாக தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேல்
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க கூடாது என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், ஈரான் இனி அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டேன் என ஒப்பந்தம் செய்து தர வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் (America President Donald Trump) கூறியிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டவில்லை. இந்த நிலையில், இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் அமெரிக்காவை தாக்கியது. இதில் ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமனேயி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 'வருவாயை நியாயமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்' - சமூக ஊடக தளங்களுக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரிக்கைஇந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா?
இந்தியா தனக்கு தேவையான 88 சதவீத கச்சா எண்ணெய், 60 சதவீத இயற்கை எரிவாயுவை சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் இந்த நீரிணை இறக்குமதி செய்து வருகிறது. இந்த நீரிணையை ஈரான் மூடிவிட்ட போதிலும், இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல், டீசல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையும் படிங்க : பிரதமர் மோடிக்கு இஸ்ரேலின் உயரிய நெசட் சபாநாயகர் விருது! ஏனெனில் இந்தியாவில் ஏற்கனவே 10 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல், எரிவாயு இருப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல அவசர காலத்துக்கு பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் எரிவாயு ஆகியவை மேலும் 5 முதல் 7 நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
