Dailyhunt
இந்தியாவில் தினசரி பயன்பாட்டுக்கு நம்பகமான 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் தினசரி பயன்பாட்டுக்கு நம்பகமான 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

TV9 Tamil 5 days ago

ந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஐகியூப் (TVS iQube), இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நம்பகமான பின்னணியுடன் ஒரு சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.

இது iQube, iQube S மற்றும் iQube ST என 3 வகைகளில் கிடைக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 94,999 என கூறப்படுகிறது அதே சமயம், அதிகபட்ச சிறப்பம்சங்கள் கொண்ட எஸ்டி மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.61 லட்சம் என கூறப்படுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பேட்டரி பேக் ஆப்சனை பொறுத்து, இது 94 கி.மீ முதல் 212 கி.மீ வரையிலான பயணத் தூரத்தை வழங்குகிறது. இதில் கிடைக்கும் மிகப்பெரிய பேட்டரி ஆப்சனை 5.3 kWh ஆக இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து ஆத்தர் ரிஸ்டா எலக்டிரிக் பைக், அதன் டிசைன் மற்றும் கூடுதல் சிறப்பமச்ங்கள் காரணமாக குடும்பத்தினர் மத்தியில் மிக பிரபலமானதாக இருக்கிறது. இதில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வருகிறது. இது வழங்கும் அதிகபட்ச பயணத் தூரம் முறையே 123 கி.மீ மற்றும் 159 கி.மீ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.04 லட்சத்தில் தொடங்கி, ரூ. 1.30 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

மாதிரி புகைப்படம்

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் V2 மற்றும் VX2 சீரிஸ்களுடன் விற்பனைக்கு கிடைக்கின்றன; இவை குறைவான விலை மற்றும் சிறந்த சிறப்பம்சங்களின் என வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன. இந்த மாடல்களில், பேட்டரியை எடுத்துச் சென்று சார்ஜ் செய்யும் போர்டபிள் சார்ஜிங் வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் VX2 GO மாடலின் விலை ரூ. 73,850-இல் தொடங்குகிறது. அதே சமயம் V2 Pro மாடலின் விலை ரூ.1.40 லட்சம் வரை செல்கிறது. இந்த ஸ்கூட்டர்கள் ஒரே ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 92 கி.மீ முதல் 165 கி.மீ வரையிலான தூரம் வரை பயணிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ள புதிய ஸ்கூட்டர்களில் சுசூகி இ-அக்சஸ் என்பதும் ஒன்றாகும். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.88 லட்சம் என்று கூறப்படுகிறது. 3.072 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், ஒரே முறை சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர் வரையிலான பயணத் தூரத்தை வழங்குகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil