இந்தியன் பிரீமியர் லீக் சீசன் 19-ன் (IPL 2026) இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி எங்கு நடைபெறும்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. முதலில் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இப்போட்டியை, டிக்கெட் தகராறு காரணமாக பிசிசிஐ மைதானத்தை மாற்றியது.ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி எப்போது?
இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது சீசனின் இறுதிப் போட்டியானது நாளை அதாவது 2026 மே 31ம் தேதி நடைபெறுகிறது.ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி எத்தனை மணிக்குத் தொடங்கும்?
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நிறைவு விழா நடைபெறும். இந்த நிறைவு விழா மாலை 6:00 மணிக்குத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 6:55 மணிக்கு ரஜத் பதிதார் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் டாஸை இரவு 7:00 மணிக்கு போடுவார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி இரவு 7:30 மணிக்குத் தொடங்கும். சிஎஸ்கே அணிக்கு வரும் ஹர்திக் பாண்ட்யா..? முன்னாள் சிஎஸ்கே வீரர் சொன்ன ரகசியம்!ஆர்சிபி மற்றும் ஜிடி அணிகளுக்கு இடையேயான பைனலின் நேரலை ஒளிபரப்பு விவரங்கள்
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இது 5வது சீசன் ஆகும். மேலும் அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது மூன்றாவது முறையாகும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் தலா ஒரு பட்டத்தை வென்றுள்ளன. 2026 இறுதிப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை மொபைல் மற்றும் லேப்டாப் தளங்களில் ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்தில் காணலாம்.
