Dailyhunt
IPL 2026: அக்சருக்கு எதிராக அடுத்தடுத்து அவுட்.. கோபத்தில் கிளம்பிய ரோஹித் சர்மா!

IPL 2026: அக்சருக்கு எதிராக அடுத்தடுத்து அவுட்.. கோபத்தில் கிளம்பிய ரோஹித் சர்மா!

TV9 Tamil 1 week ago
பிஎல் 2026(IPL 2026) தொடரின் மும்பை இந்தியன்ஸ்(Mumbai Indians) மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 8வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
டாஸ் தோற்று முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிகல்டன் ஆகியோருடன் தங்களது இன்னிங்ஸைத் தொடங்கியது. டெல்லியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரிடம் ரிகல்டன் மற்றும் திலக் வர்மாவை அடுத்தடுத்து இழந்ததால், அந்த அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. இருப்பினும், ரோஹித் சர்மா (26 பந்துகளில் 35 ரன்கள்) பல பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்பிறகு, டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் அக்சர் படேல் இறுதியில் ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்க செய்தார். அப்போது, ரோஹித் சர்மா தன்நிலை மறந்து கோபத்தை வெளிப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீண்டும் மீண்டும் அதே சிக்கல்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 24 லட்சம் அபராதம்.. காரணம் இதுதான்!

ரோஹித் சர்மாவின் விக்கெட்:

டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 8வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான தொடக்கத்தைப் பெற்றது. ரியான் ரிகல்டன் மற்றும் திலக் வர்மா அதிவிரைவாக அவுட்டாகி பெவிலியன் திரும்பியபோது, ​​மும்பை அணி தனது முதல் 2 விக்கெட்டுகளை வெறும் 18 ரன்களுக்கு இழந்தது. இத்தகைய கடினமான சூழ்நிலையில், ரோஹித் சர்மா ஒரு முனையில் நிலைத்து நின்று, தனது அனுபவமிக்க பேட்டிங்கால் அணியை நெருக்கடியிலிருந்து மீட்க முயன்றார். ரோஹித் 26 பந்துகளில் 35 ரன்களை 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸ்ர் எடுத்தபோது, இது மும்பையின் இன்னிங்ஸிற்கு சிறிது உத்வேகத்தை அளித்தது. ஆனால் அக்சர் படேல் பந்துவீசி ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்க செய்தார். கேப்டனாக சூர்யாகுமார் யாதவ்.. ஹர்திக் எங்கே? டெல்லி அணிக்கு 163 ரன்கள் இலக்கு!

ரோஹித் vs அக்சர் படேல்:

அக்சர் பட்டேலுக்கு எதிராக ரோஹித் ஷர்மாவின் சாதனைப் பட்டியல் சற்று கடினமாகவே உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ரோஹித் சர்மாவும், அக்சர் படேலும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் அக்சர் படேலுக்கு எதிராக ரோஹித் சர்மா வெறும் 67 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனுடன், அக்சர் படேலுக்கு எதிராக ரோஹித்தின் சராசரி வெறும் 16.75, ஸ்டிரைக் ரேட் 87.01, மற்றும் டாட் பால் சதவீதம் 39.7% ஆகும். இதுமட்டுமின்றி, 4 முறை ஆட்டமிழந்துள்ளார். இந்தப் போட்டியிலும், அக்சர் தனது சுழற்பந்துவீச்சால் ரோஹித்துக்குச் சிரமத்தை ஏற்படுத்தி, இறுதியில் அவரை கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil