Dailyhunt
IPL 2026: பயிற்சியைத் தொடங்கிய எம்.எஸ்.தோனி.. சேப்பாக்கத்தில் நாளை விளையாடுவாரா..?

IPL 2026: பயிற்சியைத் தொடங்கிய எம்.எஸ்.தோனி.. சேப்பாக்கத்தில் நாளை விளையாடுவாரா..?

TV9 Tamil 3 weeks ago
பிஎல் 2026 தொடரின் தனது முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி கடந்த 2026 மார்ச் 30ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது.
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. காயம் காரணமாக நட்சத்திர வீரரால் எம்.எஸ். தோனியால் (MS Dhoni) சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம்பெற முடியவில்லை. தற்போது, ​​தோனி மீண்டு வருவது குறித்து ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 28ம் தேதி தோனி சுமார் இரண்டு வாரங்களுக்கு காயத்திலிருந்து மீண்டு வருவார் என்றும், இந்தக் காலகட்டத்தில் அவர் சிகிச்சை மேற்கொள்வார் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இருப்பினும், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே ஒரு வீடியோவைப் பகிர்ந்து, தோனியின் பயிற்சி குறித்து ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது. எனக்கு கிரிக்கெட்டில் நண்பர்கள் இல்லை.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய அர்ஜூன் டெண்டுல்கர்!

பயிற்சி மேற்கொள்ளும் எம்.எஸ்.தோனி:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது விளையாட்டுப் பையைச் சுமந்துகொண்டு பயிற்சிக்காக மைதானத்திற்குச் செல்வதைக் காட்டும் காணொளியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டது. அதில், தோனி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சாதாரணமாக நடந்து செல்வது போல் தோன்றியது. அந்தக் காணொளியின் கமெண்ட் பாக்ஸில், தோனி மீண்டும் களத்திற்குத் திரும்புகிறாரா என்று சிஎஸ்கே ரசிகர்கள் கேட்கத் தொடங்கினர். அந்த வீடியோவுடன், தோனி வலைப்பயிற்சி செய்யும் சில புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்தப் புகைப்படங்களைப் பார்த்து, 'தோனி எப்போது திரும்புவார்?' என்ற அதே கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இருப்பினும், தோனி திரும்புவதற்கான தேதி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் அடுத்த போட்டிகள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது இரண்டாவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வருகின்ற 2026 ஏப்ரல் 3ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. அவர்களின் மூன்றாவது லீக் போட்டி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக வருகின்ற 2026 ஏப்ரல் 5ம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.ஏ. சின்னசாமி மைதானத்தில் நடைபெறும். IPL 2026: ராசியில்லாமல் ரன் அவுட்.. 7 ரன்களில் லாக்காகி வெளியேறிய ரிஷப் பண்ட்!

எம்.எஸ். தோனியின் ஐபிஎல் வாழ்க்கை:

எம்.எஸ்.தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை 278 போட்டிகளில் விளையாடியுள்ளார். 242 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, அவர் 38.30 சராசரி மற்றும் 137.45 ஸ்டிரைக் ரேட்டில் 24 அரைசதங்களுடன் 5439 ரன்கள் எடுத்துள்ளார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil