Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IPL 2026: கொல்கத்தா - ஹைதராபாத் போட்டியில் பிளேயிங் லெவன் எப்படி..? பிட்ச் யாருக்கு சாதகம்?

IPL 2026: கொல்கத்தா - ஹைதராபாத் போட்டியில் பிளேயிங் லெவன் எப்படி..? பிட்ச் யாருக்கு சாதகம்?

TV9 Tamil 6 months ago
ஐபிஎல் 2026 சீசன்(IPL 2026) தற்போது விறுவிறுப்பை எட்டியுள்ளது. முதல் இரண்டு லீக் போட்டிகளில் அதிரடி பேட்டிங் காணப்பட்டாலும், அதன்பிறகு, குறைந்த ரன்களை கொண்ட போட்டியாகவே அமைந்தது.
இந்த சீசனின் 6வது லீக் போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 2ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(Kolkata Knight Riders) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே ஈடன் கார்டன்ஸில் நடைபெறுகிறது. எனவே, இரு அணிகளின் பிளேயிங் லெவன் எப்படி, பிட்ச் ரிப்போர்ட் மற்றும் போட்டியை எங்கே, எப்படி நேரலையில் பார்ப்பது என்பது பற்றி தெரிந்து கொள்வோம். மேலும் இந்த போட்டியில் யார் மீது அதிக கவனம் இருக்கும் என்பதையும் கண்டறிவோம். கொல்கத்தா - ஹைதராபாத் இன்று மோதல்.. யார் வெற்றி பெறுவார்கள்?

யார் ஆதிக்கம் செலுத்துவார்கள்..?

இன்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான போட்டியில் அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், அனிகேத் வர்மா, அங்கிரிஷ் ரகுவன்ஷி, டிராவிஸ் ஹெட், ஃபின் ஆலன் மற்றும் வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது. இதில், ஒரு சில வீரர்கள் 2026 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.

ஈடன் கார்டன்ஸ் பிட்ச் ரிப்போர்ட்:

ஈடன் கார்டன்ஸ் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாகவே பார்க்கப்படுகிறது. இந்த பிட்ச் நல்ல பவுன்ஸை வழங்குவதால், பந்து பேட்டிற்கு நேர்த்தியாக வருகிறது. பவுண்டரி லைன்கள் மிகவும் பெரிதாக இல்லாததால், பேட்ஸ்மேன்களுக்கு இது எளிதாக அமைகிறது. இருப்பினும், போட்டியின் தொடக்கத்தில் புதிய பந்தில் சில அசைவுகளும் காணப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், இந்த பிட்ச் அதிக ரன்கள் எடுக்கப்படும் போட்டிகளை உருவாக்கும் திறன் கொண்டது.

எங்கே மற்றும் எப்படி நேரலையில் பார்ப்பது?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்கும். டாஸ் அரை மணி நேரம் முன்னதாக, அதாவது இரவு 7 மணிக்கு நடைபெறும். இந்தப் போட்டி இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஜியோஹாட்ஸ்டாரிலும் நேரலை ஒளிபரப்பு வசதி உள்ளது, இதன் மூலம் உங்கள் மொபைல் போன், லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவியில் போட்டியை நேரடியாகக் காணலாம். சொந்த மண்ணில் ஹைதராபாத்தை எதிர்கொள்ளும் கொல்கத்தா.. தாக்கு பிடிக்குமா ரஹானே படை..?

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஃபின் ஆலன், கேமரூன் கிரீன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், ரமன்தீப் சிங், அனுகுல் ராய், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, பிளஸ்ஸிங் முசரபானி, கார்த்திக் தியாகி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, அனிகேத் வர்மா, ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல், டேவிட் பெய்ன் / ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனட்கட், இஷான் மலிங்கா.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil