இந்தியன் பிரீமியர் லீக் 2026-ன்(IPL 2026) 12-வது போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 6ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் பிட்ச் ரிப்போர்ட்:
ஐபிஎல் 2026 தொடரின் 12வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி பொதுவாக ரன் சேஸிங்கையே விரும்பும். இங்கு நடைபெறும் டி20 போட்டிகளில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் சுமார் 163 ஆக இருந்துள்ளது. இருப்பினும், ஐபிஎல் 2026 தொடரில் இதுவரை இங்கு ஒரு போட்டி நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 226 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாகப் தற்காத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இதுவரை 35 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில், கொல்கத்தா அணி அதிகபட்சமாக 21 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், ஒரு போட்டியில் முடிவு இல்லை.கேகேஆர் vs பிபிகேஎஸ் ஐபிஎல் 2026: எங்கே பார்ப்பது?
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் 2026-ன் அனைத்துப் போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளம் வழியாகக் கண்டு மகிழலாம்.கேகேஆர் vs பிபிகேஎஸ் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஃபின் ஆலன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், ரிங்கு சிங், அனுகுல் ராய், ராமன்தீப் சிங், சுனில் நரைன், கார்த்திக் தியாகி, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி. இம்பாக்ட் வீரர்: பிளெசிங் முசரபானி.பஞ்சாப் கிங்ஸ்:
பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கோனாலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், வைசாக் விஜய்குமார், அர்ஷ்தீப் சிங். இம்பாக்ட் வீரர்: யுஸ்வேந்திர சாஹல். ரிஷப் பண்ட் நிதான அரைசதம்.. லக்னோவின் வெற்றிக்காக நடராஜன் ஷாட்!கேகேஆர் மற்றும் பிபிகேஎஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியின் கணிப்பு
ஐபிஎல் 2026 தொடரின் 12வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
