Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IPL 2026: கொல்கத்தாவிற்கு கடைசி வாய்ப்பு.. மும்பையை வீழ்த்துமா ரஹானே படை..?

IPL 2026: கொல்கத்தாவிற்கு கடைசி வாய்ப்பு.. மும்பையை வீழ்த்துமா ரஹானே படை..?

TV9 Tamil 3 hrs ago
பிஎல் 2026 சீசனில்(IPL 2026) 65வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று அதாவது 2026 மே 20ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
கொல்கத்தா அணி இந்த சீசனை தொடர்ச்சியாக 6 தோல்விகளுடன் தொடங்கியது. ஆனால் அதன் பிறகு தனது கடைசி 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று அசத்தியது. மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றிருந்தபோதிலும், இத்தொடருக்கான போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது. 12 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளதால், மும்பை அணி (Mumbai Indians) தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படத் திணறி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி, தங்களது ஏமாற்றமளிக்கும் இந்தத் தொடரை வெற்றியுடன் முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும். தோனிக்குப் பிறகு கேப்டன் பதவி எளிதானது அல்ல.. ருதுராஜ் குறித்து பேசிய ஃபிளேமிங்!

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றுல் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 36 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி 25 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் பிட்ச் ரிப்போர்ட்:

கடந்த 2026 மே 16ம் தேதி ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற முந்தைய ஐபிஎல் 2026 போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கொல்கத்தா அணி தங்களது 20 ஓவர்களில் 247/2 ரன்கள் எடுத்தது, குஜராத் அணி தங்களது 20 ஓவர்களில் 218/4 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. இது, ஐபிஎல் 2026 தொடரில் ஈடன் கார்டன்ஸ் சிறந்த பேட்டிங் சூழலை வழங்குகிறது என்பதைக் காட்டுகிறது. இந்த சீசனில் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 202 ஆகும், மேலும் அணிகள் ஏற்கனவே 226 மற்றும் 247 போன்ற பெரிய ஸ்கோர்களைப் பதிவு செய்துள்ளன. டாஸ் வென்ற பிறகு முதலில் பந்துவீசும் முடிவு எந்தவொரு கேப்டனுக்கும் ஒரு சிறந்த முடிவாக இருக்கும்.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்) :

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஃபின் ஆலன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், மணீஷ் பாண்டே, ரின்கு சிங், சுனில் நரைன், அனுகுல் ராய், வருண் சக்ரவர்த்தி, சவுரப் துபே, கார்த்திக் தியாகி இம்பாக்ட் வீரர் : மதிஷ பத்திரன ராஜஸ்தானின் பிளே ஆஃப் கனவு.. பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுமா லக்னோ..?

மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்) :

ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), நமன் தீர், திலக் வர்மா, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், வில் ஜாக்ஸ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), கார்பின் போஷ், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, ரகு ஷர்மா இம்பாக்ட் வீரர் : ரோஹித் ஷர்மா
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil