ஐபிஎல் 2026 தொடரின்(IPL 2026) 5வது போட்டியில் நேற்று அதாவது 2026 ஏப்ரல் 1ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது சொந்த ஸ்டேடியத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.
முகமது ஷாமியின் மாபெரும் சாதனை:
ஒரு போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுப்பது முகமது ஷமிக்கு இது முதல் முறையல்ல. ஐபிஎல் தொடரில் இது அவரது 5வது முறையாகும். இதற்கு முன்பும் பலமுறை ஒரு இன்னிங்ஸின் தொடக்கப் பந்திலேயே ஷமி பல பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். குறிப்பாக, ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே கே.எல். ராகுலை ஷமி ஆட்டமிழக்கச் செய்வது இது இரண்டாவது முறையாகும். ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் உள்ள வேறு எந்த பந்துவீச்சாளரும் இந்தச் சாதனையை 3 முறைக்கு மேல் நிகழ்த்தியதில்லை. மேலும், ஐபிஎல் தொடரில் இது 11வது முறையாக ஒரு இன்னிங்ஸின் முதல் ஓவரில் ஷமி விக்கெட் எடுத்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். பரிதவித்த ரிஷப் பண்ட்.. கண்டித்தாரா சஞ்சீவ் கோயங்கா..? வைரலாகும் வீடியோ!ஐபிஎல்லில் முதல் பந்திலேயே எடுக்கப்பட்ட அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்:
- முகமது ஷமி - 5 விக்கெட்டுகள்
- டிரென்ட் போல்ட் - 3 விக்கெட்டுகள்
- உமேஷ் யாதவ்- 3 விக்கெட்டுகள்
- லசித் மலிங்கா - 3 விக்கெட்டுகள்
- புவனேஷ்வர் குமார் - 3 விக்கெட்டுகள்
- பிரவீன் குமார்- 3 விக்கெட்டுகள்
- அசோக் திண்டா - 3 விக்கெட்டுகள்
- பேட் கம்மின்ஸ் - 3 விக்கெட்டுகள்

