Dailyhunt
IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்.. உத்தேச ஆடும் லெவன், பிட்ச் ரிப்போர்ட்!

IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்.. உத்தேச ஆடும் லெவன், பிட்ச் ரிப்போர்ட்!

TV9 Tamil 1 week ago
ந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது சீசனின் (IPL 2026) 43வது போட்டியில் இன்று அதாவது 2026 மே 1ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகிறது.
இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணிக்கு ரியான் பராக்கும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அக்ஸர் படேலும் தலைமை தாங்குகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் 2026 சீசன் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7வது இடத்திலும் உள்ளது. இ-சிகரெட் பயன்பாடு.. ரியான் பராக் மீது ஆக்‌ஷன் எடுத்த பிசிசிஐ!

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியம் பிட்ச் ரிப்போர்ட்:

ஐபிஎல் 2026-ன் 43-வது போட்டி, அதிக ரன்கள் குவிக்கப்படும் மைதானமான ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. கடந்த 2025 சீசனில் அங்கு 7 போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் நான்கு போட்டிகளில் சேஸ் செய்த அணிகளே வெற்றி பெற்றன. எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசவே தேர்வு செய்யும் என்பது தெளிவாகிறது. மறுபுறம், முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்சம் 200 ரன்களாவது எடுக்க வேண்டியிருக்கும். நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் இங்கு ஒரே ஒரு போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில், 229 ரன்கள் என்ற இலக்கை 18.3 ஓவர்களில் எட்டி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 40 ஓவர்களில் 457 ரன்கள் எடுக்கப்பட்டு, 11 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 போட்டிகளிலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

ராஜஸ்தான் ராயல்ஸ் ப்ளேயிங் லெவன்:

வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), டொனோவன் ஃபெரீரா, ரவீந்திர ஜடேஜா, தசுன் ஷனகா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், பிரிஜேஷ் சர்மா, யாஷ் புஞ்சா. இம்பாக்ட் வீரர்: சுபம் துபே. படிதார் அடித்த பந்து.. தரையில் பட்டு கேட்ச்? விவாதத்தை கிளப்பும் வீடியோ!

டெல்லி கேபிடல்ஸ் ப்ளேயிங் லெவன்:

அபிஷேக் போரல், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), டேவிட் மில்லர், கைல் ஜேமிசன்/மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், துஷ்மந்த சமீரா, தங்கராசு நடராஜன். இம்பாக்ட் வீரர்கள்: அசுதோஷ் சர்மா/ஆகிப் நபி.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil