Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இரு முகன் இயக்குநருடன் மீண்டும் இணையும் சியான் விக்ரம்?

இரு முகன் இயக்குநருடன் மீண்டும் இணையும் சியான் விக்ரம்?

TV9 Tamil 6 months ago
பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் சித்தார்த் ஆனந்திடம் உதவி இயக்குநராக தனது பணியைத் தொடங்கினார் இயக்குநர் ஆனந்த் ஷங்கர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியான படம் அரிமா நம்பி. இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் ஆனந்த் ஷங்கர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் ஷங்கர் தனது இரண்டாவது படத்திற்காக நடிகர் சியான் விக்ரமுடன் கூட்டணி வைத்தார். அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். சயின்ஸ் ஃபிக்சன் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் ஷங்கர் அடுத்தடுத்து நடிகர் விஜய் தேவரகொண்டாவை வைத்து நோட்டா மற்றும் நடிகர் விஷாலை வைத்து எனிமி ஆகியப் படங்களை இயக்கி இருந்தார். இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியான எனிமி படம் திரையரங்குகளில் வெளியாகி 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தற்போது இயக்குநர் ஆனந்த் ஷங்கர் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இரு முகன் இயக்குநருடன் மீண்டும் இணையும் சியான் விக்ரம்:

நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வீர தீர சூரன். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்தடுத்து எந்த இயக்குநருடன் பணியாற்ற உள்ளார் என்று செய்திகள் வெளியாகி வந்தாலும் இதுவரை எந்தப் படத்தின் பணிகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இரு முகன் படத்தின் இயக்குநருடன் நடிகர் விக்ரம் மீண்டும் இணைய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ... வேள்பாரி படத்தில் நடிக்கும் நடிகர் தனுஷ்? சங்கரின் ப்ளான் என்ன

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil