சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Suparstar Rajinikanth) முன்னணி நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2).
ஜெயிலர் 2 பட ஒன் நேம் தீம் பாடலை பகிர்ந்த இசையமைப்பாளர் அனிருத் :
ஜெயிலர் 2 படத்துடன் மோதும் புது படங்கள் :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க, அவருடன் மோகன்லால், சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் ஷாருக்கான் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது பான் இந்திய மொழிகளில் தயாராகிவரும் நிலையில், இதன் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இதில் தமிழ் முதல் இந்தி வரை பல்வேறு மொழி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது கருப்பு படம் - கொண்டாட்டத்தில் படக்குழு! மேலும் தனுஷின் ஓம் பட ரிலீஸ் தேதி அக்டோபர் 16 என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தை படக்குழு ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சேயோன் படத்தின் ரிலீஸும் அப்போதே இருக்கும் என கூறப்பட்ட நிலையில், 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகிறதாம். ஆக மொத்தத்தில் ரஜினியின் ஜெயிலர் 2 படமானது சிங்கிளாக வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
