கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குநர்களில் ஒருவராக புகழப்படுபவர் எச்.வினோத் (H. Vinoth). இவர் தல அஜித் குமார் (Ajith Kumar) முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) போன்ற நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
மேலும் இவர் கார்த்தியின் வெற்றி திரைப்படமான தீரன் அதிகாரம் 1 என்ற படத்தையும் இயக்கி பெரும் ஹிட் கொடுத்திருந்தார். அந்த வரிசையில் இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இப்படத்தில் முதல்வர் மற்றும் முன்னாள் நடிகருமான தளபதி விஜய் நடித்திருந்தார். அவருடன் பூஜா ஹெக்டே (Pooja Hegde), மமிதா பைஜூ (Mamitha Baiju) மற்றும் பாபிதியோல் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் 2026 ஜனவரி 9ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின் சென்சார் பிரச்சனைகளின் காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இப்படம் முழுவதும் இணையத்தில் லீக் ஆகியிருந்த நிலையில், பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில், சமீபத்தில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய எச்.வினோத், அதில் ஜன நாயகன் பட ரிலீஸ் சிக்கல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
சிக்மா படம் என் வாழ்க்கையிலே மறக்கமுடியாத பயணம் - ஜேசன் சஞ்சய்!
ஜன நாயகன் பட ரிலீஸ் குறித்து எச்.வினோத் பகிர்ந்த தகவல்:
அந்த நேர்காணலில் பேசிய எச்.வினோத், "ஜன நாயகன் பட ரிலீஸ் நம்மட்ட இல்லை. அது குறித்து உண்மையை சொல்லுற அளவுக்கு எனக்கு தைரியம் இல்ல. நான் அதை சொல்லும் தைரியம் வந்தாலும், யூடியூப்பில் போடும் தைரியம் உங்களுக்கு இல்ல அவ்ளோதான். அதனால வரும்போது பார்க்கலாம்" என அதில் அவர் கலகலப்பாக பேசியிருந்தார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. ஜூன் மாதம் வெளியாகும் யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து படம்ஜன நாயகன் பட ரிலீஸ் குறித்து இயக்குநர் எச்.வினோத் பேசிய வீடியோ பதிவு:

