Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Jana Nayagan: தளபதிக்கு விசில் போடே.. ஜன நாயகன் திரைப்படத்தின் புது ரிலீஸ் தேதி இதுதான்?

Jana Nayagan: தளபதிக்கு விசில் போடே.. ஜன நாயகன் திரைப்படத்தின் புது ரிலீஸ் தேதி இதுதான்?

TV9 Tamil 1 month ago
கோலிவுட் சினிமாவில் அரசனாக ரசிகர்கள் மத்தியில் போற்றப்படுபவர் முன்னாள் நடிகரும், தமிழக முதல்வரான விஜய் (CM Vijay).
இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை கிட்டத்தட்ட 68 திரைப்படங்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தனது 69வது படமான ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படத்திற்கு பிறகு முழுமையாக அரசியலில் இறங்கவுள்ளதாக முன்பே அறிவித்திருந்தார். மேலும் ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழாவில், இதுவே எனது கடைசி திரைப்படம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இப்படமானது 2026 ஜனவரி 9ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப் பட்டு, பின் சென்சார் பிரச்சனையின் காரணமாக தாமதமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இதனிடையே படமானது இணையத்தில் கசிந்திருந்த நிலையில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா (Venkat K Narayana), விரைவில் சென்சார் கிடைக்கும், அதற்கு பின் படம் வெளியாகும் என கூறினார். இந்நிலையில் "டிஸ்ட்ரிக் சிக்கெட் முன்பதிவு" (District App) இணையத்தில், ஜன நாயகன் படமானது வரும் 2026 ஜூன் 19ம் தேதியில் வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. கருப்பு திரைப்பட அபார வெற்றி.. மதுரை பதினெட்டாம்படி கருப்பனுக்கு 18 அடி அருவாள் சாத்திய ஆர்.ஜே.பாலாஜி!

ஜன நாயகன் படத்தின் புது ரிலீஸ் தேதி குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

டிஸ்ட்ரிக் செயலியில், ஜன நாயகன் திரைப்படமானது வரும் 2026 ஜூன் 19ம் தேதியில் வெளியாகவுள்ளதாகவும், விரைவில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் படக்குழு இன்னும் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை என்ற நிலையில், தற்போது இந்த் செயலியில் வெளியான அப்டேட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. தமிழக அரசிற்கான ஓடிடி.. முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் ஜன நாயகன் :

தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக இந்த ஜன நாயகன் படமானது தயாராகியுள்ள நிலையில், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இருப்பினும் இப்படம் இணையத்தில் கசிந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், திரையரங்கில் தளபதி விஜய்யினை பார்த்தே ஆகவேண்டும் என்ற குறிக்கோளோடு இருகிறார்கள். இந்நிலையில் முதல்வர் விஜய்யின் 52வது பிறந்தநாள் ஜூன் 22ம் தேதியில் கொண்டாடவுள்ள நிலையில், அதை முன்னிட்டு ஜூன் 19ம் தேதியில் ஜன நாயகன் படமானது வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil