Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜன நாயகன் பட ஷூட்டிங்கில் தளபதி விஜயை வெட்கப்பட வைத்த பூஜா ஹெக்டே. வைரலாகும் வீடியோ

ஜன நாயகன் பட ஷூட்டிங்கில் தளபதி விஜயை வெட்கப்பட வைத்த பூஜா ஹெக்டே. வைரலாகும் வீடியோ

TV9 Tamil 1 month ago
மிழ் சினிமாவில் உச்ச நடிகரான நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜன நாயகன்.
இயக்குநர் எச்.வினோத் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் 69-வது படமாக இந்த ஜன நாயாகன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் தமிழகத்தின் முதலமைச்சராகவும் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சென்சார் பிரச்சனை காரணமாக கடந்த சில மதங்களாக திரையரங்குகளில் வெளியாகாமல் இழுபறியாக உள்ள ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாகும் போது முதலமைச்சர் தளபதி விஜய் நடிப்பில் என்று வரும் என்று கொண்டாடி வருகின்றனர். ஒரு பக்கம் நடிகர் தளபதி விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றதை திரையுலக பிரபலங்கள் கொண்டாடி வரும் நிலையில் மற்றொரு பக்கம் நடிகர் விஜய் தொடர்பான பல வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.

தளபதி விஜயை வெட்கப்பட வைத்த பூஜா ஹெக்டே:

அந்த வகையில் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பின் போது தளபதி விஜயை நடிகை பூஜா ஹெக்டே வெட்கப்பட வைத்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ரைட்டிங் போர்டில் தேர்தலில் யார் வெற்றிப் அடைவார் என்று கேளிவி எழுதிவிட்டு அதற்கு பிறகு பூஜா ஹெக்டே விஜயை காட்டுகிறார். அதனைப் பார்க்கும் தளபதி விஜய் கியூட்டாக சிரிக்கிறார். இந்த வீடியோ அவரது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... Trisha Krishnan: சவுத் குயின் திரிஷாவுக்கு பர்த்டே..
ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட கருப்பு படக்குழு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil