தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வந்தாலும் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.
விரைவில் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்:
ஜன நாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா சமீபத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்து முடித்த பிறகு அவர் பேசிய போது, 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்து அவர் சுருக்கமாகப் பேசினார். "நாங்கள் தற்போது தணிக்கைச் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறோம். அது எந்த நேரத்திலும் கிடைக்கலாம்; சான்றிதழ் கிடைத்த உடனேயே நாங்கள் படத்தை வெளியிடுவோம்," என்று அவர் கூறினார். ... இயக்குநர் டூ நாயகன்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் எந்த நடிகர்-னு தெரியுமா?இணையத்தில் வைரலாகும் ஜன நாயகன் தயாரிப்பாளர் பேச்சு:

