கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சந்தீப் கிஷன் (Sundeep Kishan).
இவரின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் சிக்மா(Sigma). இப்படத்தை இயக்குநரும், முதல்வர் விஜய்யின் (CM VIjay) மகனுமான ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) இயக்கியுள்ளார். இவர் சிறுவயதிலிருந்தே சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்ட நிலையில், முதல்வர் விஜய் நடித்திருந்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் நடனமாடியிருந்தார். இந்நிலையில் இவர் இயக்குநராக படம் இயக்க ஆசைப்பட்ட நிலையில், லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) நிறுவனத்தின் தயாரிப்பின் கீழ் இவர் இயக்கியிருந்த முதல் படம்தான் சிக்மா. இதில் சந்தீப் கிஷன், சம்பத் ராஜ் மற்றும் ஃபரியா அப்துல்லா (Faria Abdullah) போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சிக்மா இப்படமானது அதிரடி ஆக்ஷன் கதையில் தயாராகியுள்ள நிலையில், 2026 ஜூலை 31ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து அண்மையில் பேசிய ஜேசன் சஞ்சய், படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜயை புகழ்ந்து பேசிய நடிகர் ராம் சரண்
சிக்மா படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்த ஜேசன் சஞ்சய்:
சமீபத்தில் ஜேசன் சஞ்சய், "சிக்மா படமானது எனக்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்கமுடியாத பயணமாக இருந்தது. என்னை நம்பிய தயாரிப்பு நிறுவனம், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கு நன்றி. ஜூலை 31ம் தேதியில் படத்தை ரசிகர்களிடம் கொண்டுசெல்ல ஆர்வமாக காத்திருக்கிறேன். விரைவில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான அப்டேட்டுகள் வெளியாகும்" என அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. பா.ரஞ்சித் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார்.. வெளியானது புதிய படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்!சிக்மா திரைப்பட ரிலீஸ் தேதி குறித்து ஜேசன் சஞ்சய் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

