நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். 70 வயதைக் கடந்தும் தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி இளம் தலைமுறையினருக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
ஜெயிலர் 2 - KHxRK பட நிலை என்ன?
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி ஜெயிலர் 2 திரைப்படம் ஏறக்குறைய நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளது. இதன் வெளியீட்டுத் தேதி குறித்துத் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும். நெல்சன் இயக்கும் KHxRK படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... டிமாண்டி காலனி 3 பட ஷூட்டிங் ஓவர்.. திரில்லர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு!இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்த் பேச்சு:

