Dailyhunt
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ஆண்பாவம் பொல்லாதது எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ஆண்பாவம் பொல்லாதது எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

TV9 Tamil 4 months ago
கோலிவுட் சினிமாவில் கடந்த 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஆண் பாவம் பொல்லாதது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் காலீஸ்வரன் தங்கவேல் எழுதி இயக்கி இருந்தார். ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடித்து இருந்தார். சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் இறுதியாக வெளியான ஸ்வீட் ஹார்ட் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது போல தற்போது வெளியான ஆண் பாவம் பொல்லாதது படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நடிகர் ரியோ ராஜிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மனோஜ் நடித்து இருந்தார். இவர்களின் ஜோடி முன்னதாக ஜோ படத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்திலும் ரசிகர்கள் மத்தியில் இந்த ஜோடி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரம்ஸ்டிக் புரடெக்‌ஷன் சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.

சக்திவேல் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஓடிடியில் வெளியாகியுள்ள ஆண்பாவம் பொல்லாதது எப்படி இருக்கு?

நடிகர் ரியோ ராஜ் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து மாளவிகா மோகனை திருமணம் செய்கிறார் ரியோ ராஜ். மாளவிகா மோகனன் குழந்தையாக இருந்தபோது பாசமாக இருந்த அவது அப்பா மாளவிகா பூப்பு அடைந்ததில் இருந்தே ஒரு ஹவுஸ் ஒய்ஃப் எப்படி இருக்க வேண்டும் என்ற ட்ரெய்னிங்கை கொடுத்து வருகிறார்.
... 100 ஜென்மம் இருந்தாலும் நான் ஒரு நடிகனாகப் பிறக்க விரும்புகிறேன் - ரஜினிகாந்த் இதனால் தனது தந்தையை விட்டு வெளியே செல்ல நினைக்கும் மாளவிகா ரியோவின் அக்கரையால் அவரை திருமணம் செய்துக்கொள்கிறார்.

ரியோவை திருமணம் செய்துகொண்ட பிறகு சுதந்திரம் என்ற பெயரில் பைத்தியகாரதனமாக செயல்படுகிறார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை வந்து விவாகரத்து வாங்கும் அளவிற்கு செல்கிறார்கள். இறுதியில் என்ன நடந்தது என்பது படத்தின் கதை. இந்தப் படத்தில் மிகவும் காமெடியாக பல அழுத்தமான கருத்துகளை வெளிப்படையாக பேசி இருந்தனர்.

குறிப்பாக போலி பெண்ணியம் பேசும் பெண்களை மிகவும் தெளிவாக இந்தப் படம் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.
... முன்னாள் கணவரின் இறப்பிற்கு பிறகு மறதியால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை - என்ன நடந்தது?
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil