Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கட்சியில் புதியவர்களுக்கு பொறுப்பு.. அதிரடி முடிவு எடுத்த CM விஜய்.. பனையூரில் நடக்கப்போகும் முக்கிய திருப்பம்!

கட்சியில் புதியவர்களுக்கு பொறுப்பு.. அதிரடி முடிவு எடுத்த CM விஜய்.. பனையூரில் நடக்கப்போகும் முக்கிய திருப்பம்!

TV9 Tamil 1 month ago
சென்னை, ஜூலை 04: தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், இன்று (ஜூலை 4) மதியம் 3 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அவசரமாகச் செல்லவிருக்கிறார்.  தேர்தல் வெற்றிகளுக்குப் பின், அவர் கட்சி அலுவலகத்திற்குச் செல்லும் இரண்டாவது முறை இது என்பதால், தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தலைமைச் செயலகப் பணிகளை முடித்துவிட்டு, அவர் நேரடியாகப் பனையூர் அலுவலகத்திற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.  3 லட்சம் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி.. பரிசீலனையில் 3 லட்சம் கார்டுகள்.. எப்போது வழங்கப்படும்!

பாக்யராஜ் மறைவால் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகள்:

கடந்த வாரம் மாற்று கட்சிகளில் இருந்து, குறிப்பாக அதிமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கே.பாக்யராஜ் அவர்களின் திடீர் மறைவு காரணமாக, அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அனைத்து நிகழ்ச்சிகளையும் தவெக தலைமை ஒத்திவைத்திருந்தது. ஒத்திவைக்கப்பட்ட அந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் இன்று முழுமையாக நடத்தப்படவுள்ளன.

முன்னாள் அமைச்சர்களுடன் சந்திப்பு:

இன்று காலையிலேயே பனையூர் கட்சி அலுவலகத்தில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மாற்று கட்சியினரை அதிகாரப்பூர்வமாக இணைக்கும் விழா வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு அலுவலகம் வரும் முதலமைச்சர் விஜய், கட்சியில் இணைந்துள்ள முக்கிய முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார். அதோடு, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியப் பொறுப்புகள் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து அவர் விரிவாக ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை உயர்வு:

சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவெக திட்டமிட்டு வருகிறது. இதற்காகக் கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 132 ஆக இருந்த தவெக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை, தற்போது 137 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்களின் எல்லைகள் மற்றும் நிர்வாக வசதிக்கேற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட இந்த 137 மாவட்டச் செயலாளர்களுக்கும் தவெக தலைவர் விஜய் இன்று நேரில் சான்றுகளை வழங்கவுள்ளார். sஇதையும்ம் படிக்க: தவெக அரசின் ஆணவம் அழிவுக்கு வழி வகுக்கும்.. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை:

மாநிலத்தில் அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு முன்பாகக் கட்சிப் பணிகளை அடிமட்ட அளவில் எவ்வாறு கொண்டு செல்வது, பூத் கமிட்டிஅமைப்பது மற்று ம் தொகுதி வாரியாகத் தொண்டர்களை ஒருங்கிணைப்பது போன்ற அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முதலமைச்சர் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும், முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கவிருக்கிறார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil