Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கடும் உயர்வை சந்தித்த கச்சா எண்ணெய்.. பெட்ரோல், டீசல் விலையில் தாக்கம் ஏற்படுமா?

கடும் உயர்வை சந்தித்த கச்சா எண்ணெய்.. பெட்ரோல், டீசல் விலையில் தாக்கம் ஏற்படுமா?

TV9 Tamil 6 days ago
சென்னை, ஜூலை 09 : அமெரிக்கா (America) மற்றும் ஈரான் (Iran) இடையே அமைதி ஒப்பந்தம் ரத்தாகியுள்ள நிலையில், சர்சதேச சந்தையில் கச்சா எண்ணெய் (Crude Oil) கடும் விலை உயர்வை சந்தித்துள்ளது.
ஹோர்முஸ் வழியாக கடந்துச் சென்ற கப்பல்களை ஈரான் தாக்கிய நிலையில், அமைதி ஒப்பந்தம் ரத்தானதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) அறிவித்தார். இந்த நிலையில் மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் ரத்தானதால் மீண்டும் பரபரப்பு

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மூன்று மாதங்களுக்கும் மேலாக கடும் போர் நீடித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தை வெற்றி பெற்ற நிலையில், அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு ஈரான் ஹோர்முஸ் நீரிணையை திறந்த நிலையில், கப்பல்கள் எந்தவித தடையுமின்றி கடந்து சென்றுவந்தன. இந்த நிலையில் தான், ஈரான் நேற்று (ஜூலை 08, 2026) மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.. ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அதுமட்டுமன்றி, ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவும் அவர் அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டார். அதன் காரணமாக அமெரிக்கா ராணுவம், ஈரான் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. இதன் விளைவாக மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடும் உயர்வை சந்தித்த கச்ச எண்ணெய் விலை

அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவோம் என்று ஈரான் கூறியிருந்தது. இந்த நிலையில், அமெரிக்கா தற்போது ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளதால் அதற்கு ஈரான் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இந்த சூழலில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது கச்சா எண்ணெய் 6 சதவீதம் உயர்வை சந்தித்து இரண்டு வாரங்களில் இல்லாத அளவு உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தாய்லாந்தில் 2,000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரத்தில் தமிழ் எழுத்துகள் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது பெட்ரோல் மற்றும் டீசல் தேவைகளுக்காக வெளிநாடுகளை நம்பியுள்ள நாடுகள் கடும் சவால்களை எதிர்க்கொள்ளும். தற்போதைய சூழலில் இந்தியா வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் பெற்று வரும் நிலையில், இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil