காளிதாஸ் 2 படம்: இயக்குநர் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கிய படம் காளிதாஸ் 2. ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் பரத் நாயகனாக நடித்து இருந்தார்.
நீளிரா படம்: இயக்குநர் சோமிதரன் எழுதி இயக்கி உள்ள படம் நீளிரா. இந்தப் படம் தெலுங்கு மொழியில் உருவாகி இருந்தாலும் தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். ஈழப் போரை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படம் நாளை 03-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கார்மேனி செல்வம் படம்: இயக்குநர் ராம் சக்ரி எழுதி இயக்கி உள்ள படம் கார்மேனி செல்வம். இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரகனி கதையின் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா, லட்சுமி பிரியா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா பரக்கோடு, சங்கர நாராயண் வி, கோதண்டம், கரண் சக்ரவர்த்தி என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை 03-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ...
மலையாள சினிமா வரலாற்றில் முதன்முறையாக… நேரடியாக தியேட்டரில் வெளியாகும் பேட்ரியாட் படத்தின் ட்ரெய்லர்பைக்கர்: இயக்குநர் அபிலாஷ் ரெட்டி எழுதி இயக்கி உள்ள படம் பைக்கர். இந்தப் படம் பைக் ரேஸிங்கை மையமாக வைத்து உருவாகி உள்ளது. நடிகர் ஷர்வானந்த் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் மால்விகா நாயர் மற்றும் டாக்டர் ராஜசேகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் படம் நாளை 03-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
லீடர்: இயக்குநர் துரை செந்தில்குமார் எழுதி இயக்கி உள்ள படம் லீடர். ஆக்ஷன் செண்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்து உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் நாளை 03-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ... Kavin: ரஜினி - விஜய் ஸ்டைல் நயன்தாராவிடமும் இருக்கு - கவின் பேச்சு!

