Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் - ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் - ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்

TV9 Tamil 3 weeks ago
சென்னை, ஆகஸ்ட் 1 :காமன்வெல்த் போட்டியில் மும்முறை தாண்டுதலில் வெள்ளி வென்ற தமிழக வீரர்களான பிரவீண் சித்ரவேலுக்கு ரூ.30 லட்சமும் வெண்கலம் வென்ற செல்வபிரபுவுக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார்.
மேலும் ஒரே போட்டியில் தமிழக வீரர்கள் இருவர் பதக்கங்களை வென்றிருப்பது மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்

இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் பதிவில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேலுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்ற தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்யின் எக்ஸ் பதிவு

 

இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபுவுக்கு 20 இலட்சம் ரூபாயும் வழங்கப்படும். ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும். இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியைத் தேடித்தந்ததோடு, ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். காமன்வெல்த் 2026 போட்டியில் ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில், தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தூரம் தாண்டி தனது சிறந்த தனிப்பட்ட சாதனையைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதே போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் செல்வ பிரபு திருமரன் 16.52 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஒரே போட்டியில் இரண்டு தமிழக வீரர்கள் பதக்கம் வென்றதால், கிளாஸ்கோ மைதானமே இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது. ஜமைக்காவின் ஜோர்டான் ஸ்காட் தங்கப் பதக்கத்தை வென்றார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil