தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது போல சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
கணவருடனான பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்ட கயல் சீரியல் நடிகை:
ஸ்ரீலங்கா நாட்டைச் சேர்ந்த நடிகை சுபாஷினி பெங்களூரில் தனது கணவர் பிப்பின் என்பவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கயல் சீரியலின் படப்பிடிப்புகள் காரணமாக போரூரில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தார். சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நடிகை சுபாஷினி தனது கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவர் கணவருடன் நேற்று இரவு வீடியோ காலில் பேசியபிறகு இந்த முடிவை எடுத்து இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த செய்த் தற்போது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ... இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யும் கருப்பு படக்குழு - வைரலாகும் தகவல்நடிகை சுபாஷினி இறுதியாக வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
... ரஜினிகாந்த் மற்றும் விஜயிடம் உள்ள அதே ஸ்டைல் நயன்தாராவிடம் உள்ளது - இயக்குநர் விஷ்ணு எடவன்(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050)

