தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 4) பிரச்சாரம் மேற்கொண்டார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம்
திமுகவும் 2, 3 முறை ஆட்சியில் இருந்தது. தற்போதும் இந்த இரு கட்சிகள் பெயரளவுக்கே கூட்டணி அமைத்துள்ளது. திமுகவும், காங்கிரசும் கூட்டணி என்று சொல்லிவிட்டு சில தொகுதிகளில் எதிர் எதிராக போட்டியிடுகின்றனர். தமிழகத்திலும், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் உள்ளது. புதுச்சேரியிலும் குழப்பமான கூட்டணியாகவே உள்ளது. இதே போல, என். ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி சேர்ந்த கூட்டணி கிடையாது. சோர்ந்து போன கூட்டணி. தமிழக வெற்றிக் கழகத்தை வைத்து அரசியல் ஆட்டம் நடைபெற்றது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புதிய சவால்: 3 மொழி கட்டாயம்..!தவெக யாருடனும் உறவாடவில்லை
தற்போது, தவெக தனியாக போட்டியிடுவதை வைத்து நாம் யாருடனும் ஒட்டி உறவாடவில்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. காங்கிரஸும், பாஜகவும் மத்தியில் ஆட்சியில் இருந்த நிலையிலும், புதுச்சேரி மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கையான மாநில அந்தஸ்து கோரிக்கை ஏன் நிறைவேற்றப்படவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கலாம் என்று கூறியும் தற்போது வரை எதற்காக கொடுக்கப்படவில்லை.திமுக -பாஜக கூட்டணி வேண்டாம்
புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடை தொடர்பாக நான் கூறிய கருத்துக்கு அனைத்து அமைச்சர்களும் எதிர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், தனியார் செய்தி தாள் நிறுவனத்தில் வெளியான ரேஷன் கடை தொடர்பான செய்திக்கு என்ன பதில் அளிக்கப் போகிறார்கள். திமுக கூட்டணியில் பெயருக்கு இருக்கிற காங்கிரஸும் சரி. பாஜக கூட்டணியில் நிர்பந்தத்தில் சேர்ந்திருக்கிற கட்சிக்கும் சரி வாக்களித்து ஏமாந்து விடாதீர்கள். தீய சக்தி திமுக இருக்கிற காங்கிரஸ் கூட்டணியும் வேண்டாம். பாஜக இருக்கிற கூட்டணியும் வேண்டாம். தமிழகம்- புதுச்சேரியில் தவெக ஆட்சி அமைய வேண்டும். 'திராவிட மாடல்' என்பது ஒரு ஏமாற்று வேலை.. தோல்வி பயத்தில் முதல்வர்.. டிடிவி தினரகன் சாடல்!!
