தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. இவர் முன்னதாக தமிழ் சினிமாவில் போர் தொழில் என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார்.
கர படம் எனது திரைப்பயணத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கும்:
இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, தனுஷ் சார், பல விதங்களில் வடிவமைத்து, பல்வேறு பரிமாணங்களில் ஆராய்ந்து பார்க்கக்கூடிய ஒரு நடிகர் ஆவார். கர என்பது ஒரு வழக்கமான அல்லது சம்பிரதாயபூர்வமான கதையாகக் கருதப்படக்கூடிய ஒன்றல்ல. உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய மற்றும் அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற ஆழ்ந்த பொறுப்புணர்வுடன் நான் இப்படத்தை உருவாக்கினேன். எனது திரைப்பயணத்தின் இத்தருணத்தில், இப்படம் எனக்கு மிகவும் முக்கியமானதாகும். மிகுந்த உணர்வு ஆழத்துடனும், வலுவான கதை சொல்லும் திறனுடனும் நான் இக்கதையை அணுகினேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ... ரஜினிகாந்தின் அந்த படத்திற்கு நான் தான் முதலில் பேசப்பட்டேன் - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துஇணையத்தில் வைரலாகும் இயக்குநர் விக்னேஷ் ராஜா பேச்சு:

