தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் திராவிட முன்னேற்ற கழக பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பேசினார்.
முதல்வர் விஜய்யை கர்நாடகத்தில் கட்டி வைத்துவிடுவார்கள்
தமிழக மக்களை காமராஜர் பெயரை கூறி கதை சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கிறார். இவற்றை தமிழக மக்களுக்கு நாம் தான் தெளிவுபடுத்த வேண்டும். முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கர்நாடக மாநிலம் சென்றால் அவரை அங்கேயே கட்டி வைத்து விடுவார்கள் என்று தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. ஏற்கனவே, அனிதா ராதாகிருஷ்ணன் எம். எல். ஏ. தமிழக வெற்றிக் கழக அரசையும், தமிழக முதல் அமைச்சரையும் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். 'இத்தனை குவாரிகள், இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்கள் எப்படி வந்தது?'.. அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மீது அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி குற்றச்சாட்டு!முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசிய எம்எல்ஏ
இதில், நான் ரவுடிக்கு ரவுடி. என்னை யாரும் தொட்டு பார்க்க முடியாது. முதல்வர் நாற்காலியில் 3 கால்கள் திமுகவின் கால்கள் ஆகும். திமுக ஆட்சி வரவில்லை என்று நினைக்க வேண்டாம் என்பன உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், திருச்செந்தூர் தொகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணன் எம். எல். ஏ.வை காவலர்கள் அதிரடியாக கைது செய்திருந்தனர்.அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முன் ஜாமீன்
அவரிடம் சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவருக்கு முன் ஜாமீன் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அனிதா ராதாகிருஷ்ணன் எம். எல். ஏ. பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. கொளத்தூர் தொகுதி EVM ஆய்வு.. 30% வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி.. உயர் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு!!
