Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கார்த்திக் சுப்புராஜ் - ராணா இணைந்து தயாரிக்கும் புது படத்தின் டைட்டில் வெளியீடு!

கார்த்திக் சுப்புராஜ் - ராணா இணைந்து தயாரிக்கும் புது படத்தின் டைட்டில் வெளியீடு!

TV9 Tamil 2 months ago
யக்குநராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் சூர்யா (Suriya) போன்ற நடிகர்களுடன் படங்களை இயக்கியிருப்பவர் கார்த்தி சுப்புராஜ் (Karthik Subbaraj).
இவரின் இயக்கத்தில் இறுதியாக ரெட்ரோ (Retro) என்ற படம் வெளியாகியிருந்தது. கடந்த 2025ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே (Pooja Hegde) மற்றும் சூர்யா இணைந்து நடித்திருந்தனர். இது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர் எந்த படத்தை இயக்கவுள்ளார் என அறிவிக்கவில்லை.

தற்போது இவர் புது படத்திற்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் இவர் தயாரிப்பாளராக ஸ்டோன் பென்ச் என்ற நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரித்துவருகிறார். இந்நிலையில் இவரின் தயாரிப்பு நிறுவனத்துடன் நடிகர் ராணாவின் (Rana) தி ஸ்பிரிட் தயாரிப்பு நிறுவனம் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியில் எந்த படம் தயாரிக்கிறது என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளார்.

இந்த இரு தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள புது படம்தான் நீளிரா (Neelira). தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
நான் பார்த்ததிலேயே மிகவும் எதார்த்தமான, இயல்பான நடிகர் ரஜினிகாந்த் - நடிகர் வசந்த் ரவி

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ராணா கூட்டணி தயாரிப்பில் உருவாகியுள்ள புது படத்தின் அறிவிப்பு:

இந்த திரைப்படத்தை புது படத்தை அறிமுக இயக்குநர் சோமித்ரன் இயக்க, ராணா மற்றும் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் லீட் நடிகர்களாக லெவன் பட புகழ் நடிகர் நவீன் சந்திரா, சனந்த், விது மற்றும் சிந்து குமரேசன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.இப்படத்தின் ஷூட்டிங்கானது முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட வேளைகளில் இருக்கிறது.

இப்படமானது பொற்கலவரம் பற்றிய ஆக்ஷன் படமாக தயாராகியுள்ளதாம்.
ஆத்தாடி மனசுதான் ரெக்க கட்டி பறக்குது… 14 ஆண்டுகளைக் கடந்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற கழுகு படம்! குடும்ப பொழுதுபோக்கு, எமோஷனல் மற்றும் காமெடி போன்ற கதைங்கலத்தில் தயாராகியுள்ளதாம். இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், அத்துடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீளிரா திரைப்படமானது வரும் 2026 ஏப்ரல் 3ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிட்டுள்ளது. இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil