நடிகர் கார்த்தியின் (Actor Karthi) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் மெய்யழகன். ஃபீல் குட் படமாக வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
டிசம்பரில் வெளியாகும் வா வாத்தியார் படம்:
ஆக்சன் காமெடி படமாக உருவாகி வரும் இந்த வா வாத்தியார் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.எம்.சுந்தர், வடிவுக்கரசி, மதுர் மிட்டல் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. ... கார் விபத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா சொன்ன விசயம் - வைரலாகும் பதிவு!வா வாத்தியார் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

