Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கருப்பு படத்திலிருந்து வெளியானது கருப்பா கூட வா வீடியோ பாடல்

கருப்பு படத்திலிருந்து வெளியானது கருப்பா கூட வா வீடியோ பாடல்

TV9 Tamil 1 month ago
மிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலைப் பெற்றப் படமாக உள்ளது சூர்யாவின் கருப்பு படம். இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்த கருப்பு படத்தை எழுதி இயக்கி உள்ளார்.
பொதுவாக தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு சாமிப் படங்கள் என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இயற்கைக்கு அப்பாற்பட்டு கனவுகளை நிறைவேற்றும் ஃபேண்டசி பாணியில் வெளியாகும் படங்களை பார்க்கையில் மக்களுக்கு பிடித்து இருக்கும். கடவுள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையும் அப்படிதான் என்று கூறலாம். தங்களுக்கு இயலாத ஒன்றை கடவுளிடம் கேட்டால் நடக்கும் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் கடவுளிடம் விடும் மக்கள் பலர் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் கடவுளை மையமாக வைத்து தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகம். இப்படி இருக்கும் சூழலில் தமிழ் சினிமாவில் நியூ ஏஜ் சாமி படமாக வெளியானது கருப்பு. ஃபேண்டசி ட்ராமா பாணியில் வெளியான இந்த கருப்பு படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக கருப்பு சாமியாக நடித்து இருந்தார். நீதிக்காக நீதிமன்றம் செல்லும் நபர்களுக்கு நீதி மறுக்கப்படும் போது அவர்கள் கடவுளிடம் முறையிடுகின்றனர். நீதி மறுக்கப்படும் மக்களுக்காக கடவுளே போராடுவது போல இந்தப் கருப்பு படம் அமைக்கப்பட்டு இருந்தது.

கருப்பு படத்திலிருந்து வெளியானது கருப்பா கூட வா வீடியோ பாடல்:

இந்த கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் இந்த கருப்பு படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் கருப்பு படத்தில் இருந்து கருப்பா கூட வா என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. ... கருப்பு படத்தின் VFX சர்ச்சை குறித்து வெளிப்படையாக பேசிய ஆர்.ஜே. பாலாஜி

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil