Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கருப்பு படத்தின் புரமோஷன் பணிகளில் களமிறங்கிய படக்குழு  - வைரலாகும் போட்டோஸ்

கருப்பு படத்தின் புரமோஷன் பணிகளில் களமிறங்கிய படக்குழு - வைரலாகும் போட்டோஸ்

TV9 Tamil 2 months ago
மிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படம் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாக உள்ள 45-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றது போல தற்போது இந்தப் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து உள்ளார். சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது அவர்களின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கருப்பு படத்தின் புரமோஷன் பணிகளில் களமிறங்கிய படக்குழு:

இந்த நிலையில் கருப்பு படம் வருகின்ற 14-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கி உள்ளது. அதன்படி இந்தப் படத்தின் புரமோஷன் பணிக்காக கருப்பு படக்குழு ஸ்ரீலங்காவிற்கு சென்றுள்ளது. அப்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் நடிகர் சூர்யா உடன் புகைப்படங்களை எடுத்து அதனை தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... ஜன நாயகன் பட கசிவால் விஜய் மற்றொரு படத்தில் நடிப்பாரா? எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

... சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil