நடிகர் கவின்(Kavin) தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது.
நயன்தாரா குறித்து கவின் பேசிய விஷயம்:
அந்த பத்திரிகை நேர்காணலில் பேசியிருந்த கவின், "ரஜினிகாந்த் சார், விஜய் சாரின் வெர்க்கிங் ஸ்டைல் நயன்தாராவிடமும் இருக்கிறது" என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.ஹாய் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
நடிகை நயன்தாராவின் முன்னணி நடிப்பில் தயாராகிவரும் திரைப்படம்தான் ஹாய். இதை அறிமுக இயக்குநர் விஷ்ணு இடவன் இயக்கியுள்ள நிலையில், இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துவருகிறார். இந்த படமானது பெல் குட் திரைப்படமாக சாதாரண லவ் ஸ்டோரியை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறதாம். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இதை வரும் 2026 ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. காக்கி சட்டை - கொடி படங்களில் அப்படி நான் செய்தது தவறு… இயக்குநர் துரை செந்தில் குமார் ஓபன் டாக் அதே ஏப்ரல் மாதத்தில் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாராகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெளியாகும் நிலையில், ஹாய் படத்தின் ரிலீஸ் தள்ளிபோவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் ஏப்ரல் இறுதி அல்லது மே இடைப்பட்ட நாளில் ஹாய் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து படக்குழு இன்னும் அறிவிப்புகளை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

