கோலிவுட் சினிமாவில் தற்போது இளம் கதாநாயகியாக பல உச்ச நடிகர்களுடன் நடித்துவருபவர் கயாடு லோஹர் (Kayadu Lohar).
சிலம்பரசனுடன் நடிக்கமுடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்த நடிகை கயாடு லோஹர்:
அந்த நேர்காணலில் பேசிய கயாடு லோஹர், "நான் எப்போது சிலம்பரசன் சாருடன் நடிப்பதற்கு படங்களில் ஒப்பந்தமானாலும், அந்த படம் என்னை விட்டு போய்விடுகிறது. இல்லையென்றால் அந்த படமானது நடக்காமல் போகிறது. ஆகவே, நான் இறுதியாக அவருடன் ஒரு படத்தில் நடிக்கும்போது, அது உண்மையிலேயே ஒரு அற்புதமான படைப்பாக அமையும் என்று எங்கோ எழுதப்பட்டிருப்பதாக நான் நம்புகிறேன். அதை நான் பிரபஞ்சத்திடமே விட்டுவிடுகிறேன். நான் அவருடன் 2 படங்களில் பணியாற்றிருக்கவேண்டியது" என அதில் அவர் வெளிப்படையாக கூறியிருந்தார்.நடிகை கயாடு லோஹரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
சிலம்பரசனுடன் கயாடு லோஹர் இணையவிருந்த படம் :
பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட பாடம் STR49. இதில் சந்தனம் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, படத்தின் ஷூட்டிங் பூஜைகளும் நடந்தது. மஞ்சணத்தி படத்திற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் - கயாடு லோஹர்! இந்த தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்சனையின் காரணமாக இது கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிலம்பரசன் வெற்றிமாறனுடன் அரசன் படத்தில் உடனே இணைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிம்பு மற்றும் கயாடு லோஹர் கூட்டணி படம் நடக்காமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
