கேரளா, மே 26 : கேரளாவில் (Kerala) சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்பு தானம் செய்த 10 மாதக் குழந்தை ஏலினின் பெயரில் கேரள அரசு புதிய ப்ராண்ட் நோட்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
விபத்தில் மூளைச்சாவு அடைந்த 10 மாத பெண் குழந்தை
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் 10 மாத பெண் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரஹாம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்த குழந்தையின் குடும்பத்தினர் குழந்தையை அழைத்துக்கொண்டு கோட்டயத்தில் இருந்து திருவல்லாவுக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது எதிரில் வந்த கார், குழந்தை சென்ற காரின் மீது மோதி கடும் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தை மூளைச்சாவு அடைந்தது. 'தீவிரமெடுக்கும் எபோலா வைரஸ் பரவல்'.. இந்த நாடுகளுக்கு அவசியமின்றி பயணிப்பதை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்!தானம் செய்யப்பட்ட குழந்தையின் உடல் உறுப்புகள்
குழந்தை மூளைச்சாவு அடைந்த நிலையில், குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். அதன்படி, குழந்தையின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், இதய வால்வுகள், 2 கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டன. இதன் காரணமாக கேரளாவின் மிக இளம் வயது உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற சிறப்புக்கு உரியவராக குழந்தை ஆலின் மாறியது. இதன் காரணமாக அரசு மறியாதை உடன் குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. காதல் விவகாரத்தில் அடித்து கொல்லப்பட்ட பேட்மிண்டன் வீரர்?.. ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்! இந்த நிலையில், குழந்தை ஆலினின் தியாகத்தை போற்றும் விதமாக கேரளா அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, குழந்தை ஆலினின் பெயரில் புதிய ப்ராண்ட் நோட்டு புத்தகங்களை கேரள அரசு வெளியிட்டுள்ளது. மகள் ஆலினின் உறுப்புகளை தானம் செய்து 4 பேருக்கு வாழ்வளித்த பெற்றோரின் தியாகத்தை போற்றும் வகையில் இது செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு விளக்கம் அளித்துள்ளது.
