Dailyhunt
கேஸ் சிலிண்டர் புக் பண்ணப்போறீங்களா? ரூ.200 சலுகை வழங்கும் பேடிஎம் - எப்படி பெறுவது?

கேஸ் சிலிண்டர் புக் பண்ணப்போறீங்களா? ரூ.200 சலுகை வழங்கும் பேடிஎம் - எப்படி பெறுவது?

TV9 Tamil 2 weeks ago

ஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

குறிப்பாக வணிக கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்திருக்கிறது.  இந்த நிலையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும், டீ கடைகள் மற்றும் ஹோட்டல்கள் இயங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.  இந்த நிலையில் வீட்டில் எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்தும் மக்களுக்கு ஒரு முக்கிய சலுகையை முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான பேடிஎம்  அறிவித்துள்ளது. கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு ரூ.200 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ.200 சலுகை வழங்கும் பேடிஎம்

நாடு முழுவதும் வணிக கேஸ் சிலிண்டர்கள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்த கேஷ்பேக் சலுகை பொதுமக்களுக்கு நிவாரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சமீபத்தில் வணிக எரிவாயு விலை ஏப்ரல் 1, 2026 அன்று முதல் ரூ.200 உயர்ந்துள்ள நிலையில், இந்த சலுகை அதிக கவனம் பெற்றுள்ளது.

எப்படி பெறுவது?

இந்த சலுகையைப் பெறுவது மிகவும் எளிது. பயனர்கள் தங்களது மொபைலில் பேடிஎம் செயலியை நிறுவி, Recharge and Bills பகுதியில் உள்ள Gas Cylinder Booking என்ற ஆப்சனைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ், இண்டேன் கேஸ் போன்ற நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, வாடிக்கையாளர் எண் அல்லது கேஸ் நிறுவனத்துடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

பின்னர்  முன், Offers for You பகுதியில் வழங்கப்பட்டுள்ள CYLWIN என்ற புரோமோ கோடை பயன்படுத்தினால், ரூ.200 வரை கேஷ்பேக் பெறும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இந்த சலுகை எல்லா பயனர்களுக்கும் கிடைக்காது. ஒவ்வொரு 2000வது பயனருக்கு மட்டும் இந்த கேஷ்பேக் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். ஒவ்வொரு பயனரும் இந்த நன்மையை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். கேஷ்பேக் பெற, பேடிஎம் உடன் அவர்களது வங்கி கணக்கும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..

நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்று கூறப்டும் நிலையில் பொதுமக்களுக்கு இந்த கேஷ்பேக் சலுகை ஒரு சிறிய நிவாரணமாக இருக்கும். ஆனால், முன்பதிவு செய்வதற்கு முன் அனைத்து விதிமுறைகளையும் சரிபார்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil