Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்: பிரதமர் நரேந்திர மோடியின் 'டயட் சீக்ரெட்' அம்பலம்!

ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்: பிரதமர் நரேந்திர மோடியின் 'டயட் சீக்ரெட்' அம்பலம்!

TV9 Tamil 1 month ago
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது சுறுசுறுப்பான இயல்புக்கும் ஆரோக்கியத்திற்கும் இந்தியப் பாரம்பரிய சைவ உணவுகளையே பிரதானமாகக் கருதுகிறார்.
இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த முருங்கை பரோட்டா அவரது காலை உணவுப் பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கிறது. பாசிப்பருப்பு மற்றும் சிறுதானியங்கள் கொண்டு எளிதில் செரிமானமாகும் வகையில் செய்யப்படும் கிச்சடி அவருக்கு மிகவும் பிடித்த உணவாகும். குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளான தோக்லா மற்றும் கந்த்வி போன்ற ஆவியில் வெந்த சிற்றுண்டிகளையும் அவர் விரும்பி உட்கொள்கிறார். எண்ணெய் மற்றும் அதிக காரம் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, சத்துக்கள் நிறைந்த எளிய உணவுகளுக்கே அவர் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறார்.

ஊட்டச்சத்து நிறைந்த முருங்கை பரோட்டா

பிரதமர் மோடி அவர்களின் உணவுப் பட்டியலில் முதன்மையான இடத்தைப்பிடிப்பது முருங்கை இலை அல்லது முருங்கைக் காய் சாறு கொண்டு தயாரிக்கப்படும் 'முருங்கை பரோட்டா' (Moringa Paratha) ஆகும். முருங்கையில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இந்த சத்தான பரோட்டாவை அவர் தனது காலை உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.

செரிமானத்திற்கு ஏதுவான கிச்சடி

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் 'கிச்சடி' முக்கியமானது. பாசிப்பருப்பு, அரிசி அல்லது சிறுதானியங்கள் (Millets) மற்றும் லேசான நறுமணப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவு மிகவும் எளிதில் செரிமானமாகக்கூடியது. நீண்ட தூரப் பயணங்கள் மற்றும் கடுமையான பணிச்சுமைக்கு இடையே, உடலுக்குத் தேவையான புரதச்சத்தையும் ஆற்றலையும் வழங்கக்கூடிய எளிய உணவாக கிச்சடியை அவர் விரும்பி உட்கொள்கிறார். : பால், கேஸ் இல்லாமல் ஒரு நிமிடத்தில் டீ போடலாம் வாங்க..!

பாரம்பரிய குஜராத்தி சிற்றுண்டிகள்

தனது சொந்த மாநிலத்தின் பாரம்பரிய சிற்றுண்டிகளான தோக்லா (Dhokla) மற்றும் கந்த்வி (Khandvi) ஆகியவற்றையும் அவர் விரும்பி உண்கிறார். கடலை மாவு மற்றும் தயிர் கொண்டு ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்படும் தோக்லா, குறைந்த கலோரி கொண்ட ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். எண்ணெய் பொரித்த உணவுகளைத் தவிர்த்து, ஆவியில் வெந்த பாரம்பரிய உணவுகளை உட்கொள்வது அவரது ஆரோக்கியமான வாழ்வியலின் முக்கிய அம்சமாகும்.

பருவகால பழங்கள் மற்றும் எளிய சைவ தாலி

பிரதமர் மோடியின் தினசரி உணவில் பருவகால புதிய பழங்களுக்கு (Seasonal Fruits) எப்போதும் முக்கிய இடமுண்டு. பழங்களில் இருந்து கிடைக்கும் இயற்கைச் சர்க்கரையும் நாரச்சத்தும் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைக்க உதவுகின்றன. மேலும், பாராளுமன்ற உணவகமாக இருந்தாலும் சரி, அரசுப் பயணங்களாக இருந்தாலும் சரி, காய்கறிகள், பருப்பு, ரொட்டி மற்றும் சாலட் அடங்கிய எளிய 'சைவ தாலி' உணவையே அவர் தேர்வு செய்கிறார். இத்தகைய எளிய மற்றும் சத்துமிக்க பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களே அவர் எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இயங்குவதற்குக் காரணியாக அமைகின்றன.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil