Dailyhunt
K.P. Munusamy Tamil Nadu Election: அதிமுகவில் தொண்டனாக இணைந்து து.பொ.செயலராக உயர்ந்த கே.பி.முனுசாமி.. மீண்டும் வெற்றிக் கனியை பறிப்பாரா?

K.P. Munusamy Tamil Nadu Election: அதிமுகவில் தொண்டனாக இணைந்து து.பொ.செயலராக உயர்ந்த கே.பி.முனுசாமி.. மீண்டும் வெற்றிக் கனியை பறிப்பாரா?

TV9 Tamil 1 month ago
திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக இருந்து வருபவர் கே.
பி. முனுசாமி. இவர், கடந்த 1952 ஆம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி முனுசாமி- பூங்காவனம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அரசியல் மீது எழுந்த ஆர்வம் காரணமாக கடந்த 1972- ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். பின்னர் படிப்படியாக கட்சியில் வளர்ந்து கடந்த 1988- ஆம் ஆண்டு அதிமுக மாவட்ட இளைஞர் பிரிவின் தலைவராக உயர்ந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு 1991- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, காவேரிப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தனது முதல் வெற்றியை உறுதி செய்தார். பின்னர், அவர் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இருந்து 12- ஆவது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கடந்த 2001- ஆம் ஆண்டு மாநில அரசியலுக்கு திரும்பிய கேபி முனுசாமி காவேரிப்பட்டினம் தொகுதியில் மீண்டும் களம் இறங்கி 2- ஆவது முறையாக எம்எல்ஏவாக பதவி ஏற்றார்.

அதிமுக மாவட்ட செயலர் பொறுப்புக்கு உயர்ந்த கே.பி.முனுசாமி

இப்படியாக அரசியல் பயணம் தொடர்ந்து அதிமுகவின் முக்கிய புள்ளியாக மாறிய கேபி முனுசாமி, கடந்த 2011- ஆம் ஆண்டு அதிமுகவின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு உயர்ந்தார். பின்னர் அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் களமிறங்கிய கேபி முனுசாமி 3- ஆவது முறையாக எம்எல்ஏ பதவியை தன் வசப்படுத்திக் கொண்டார். இதனிடையே, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். கடந்த 1991- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காவேரிப்பட்டினம் தொகுதியில் திமுக வேட்பாளர் வி.சி. கோவிந்தசாமி கவுண்டரை விட 70,136 வாக்குகள் பெற்று கேபி முனுசாமி வெற்றி பெற்றார்.  
R. Gandhi Tamil Nadu Election: திமுகவின் சாதனை செம்மல்.. ராணிப்பேட்டையின் வெற்றி முகம்.. ஆர். காந்திக்கு மீண்டும் வசமாகுமா தொகுதி!

கிருஷ்ணகிரி தொகுதியில் தடம் பதித்த முனுசாமி

பின்னர் 1996- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் களமிறங்கிய கே பி முனுசாமி திமுக வேட்பாளர் பி. வி. எஸ். வெங்கடேசனிடம் 37,086 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவி இருந்தார்.இதைத்தொடர்ந்து, 2001- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காவேரிப்பட்டினம் தொகுதியில் களமிறங்கிய கே. பி. முனுசாமி 67,241 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வி.சி. கோவிந்தசாமி கவுண்டரை தோற்கடித்தார். பின்னர், 2006 சட்டமன்ற தேர்தலில் கேபி முனுசாமி 53,144 வாக்குகள் மட்டுமே பெற்று பாமக வேட்பாளர் டி. ஏ. மேகநாதனிடம் தோல்வியை தழுவினார்.

3- ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட கே.பி.முனுசாமி

2011 தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதிக்கு மாறிய கேபி முனுசாமி 89,776 வாக்குகள் பெற்று தனது வெற்றியை உறுதிப்படுத்தினார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் இறங்கிய கேபி முனுசாமி எதிர்பாராத விதமாக 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு வெறும் 51,687 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். இதை தொடர்ந்து, 2021 சட்டமன்ற தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் களமிறங்கிய கே. பி. முனுசாமி 94,14 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் பி. முருகனை தோற்கடித்து வெற்றி கொடி நாட்டினார். வருகின்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் கேபி முனுசாமி களம் இறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதிலும் தனது வெற்றி கொடியை நிலை நிறுத்துவார் என்று தெரிகிறது.  
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil