இளம் நடிகையாக பாலிவுட் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கிரிதி சனோன். இவர் தொடர்ந்து பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார்.
இவர் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான தேரே இஷ்க் மே படத்தில் சிறப்பாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையடுத்து இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியான படம் காக்டைல் 2. இப்படத்தில் ஷாஹித் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் கிரிதி சனோன் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து இந்தி மொழியில் நடித்துவந்த இவர், தனுஷின் தேரே இஷ்க் மே படத்தின் மூலமாக தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பேமஸானார். மேலும் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கிரிதி சனோன், "நடிகைகளை குறித்து விமர்சிப்பது என்பது சிலருக்கு பொழுதுபோக்காகிவிட்டது. ஆடைகள் விலகினால் போதும், உடனே அந்த போட்டோவை பதிவிட்டு, தங்கள் தவறான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள்.

நடிகைகளை கண்ணியமாக பாருங்க, உங்களுக்கு திரையில் தோன்றின் மகிழ்விக்கும் எங்களை மரியாதையாக நடத்துங்கள். போலி ஆபாச படங்களை வெளியிட்டு காண வேண்டுமா?. இது கேவலமாக இல்லையா? என நடிகைகள் குறித்த எதிர்மறை கருத்துக்கள் குறித்து கிரிதி சனோன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

